1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் சத்துருக்கன்
வயது 308 டிசம்பர், 1989 – 31 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- வயாவிளான்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவலிங்கம் சத்துருக்கன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு கடந்த பின் உம் நினைவை நாடி
ஈரவிழிகளுடன் உன் வதனம் தேடி
தீராத வேதனையை மனதில் பூட்டி
மாறாத நினைவுகளில் வாழ்கின்றோம்!
இளமையில் உயிர் பிரிந்தாய்
இதயத்தில் உறைந்து நின்றாய்
நீ இல்லா இவ்வுலகு எமக்கு வெற்றிடமே!
எழுதிச்செல்லும் விதியின் கையில்
சிக்கித் தவிக்கும் மானிடர் நாம்
அழுது புலம்பித் தொழுதாலும்!
சிந்தை நொந்து புரண்டாலும்
விதியின் மதியில் மாற்றமில்லை!
நீயில்லை இங்கே நாமில்லை உன்னருகே
இதுதான் விதியா? இல்லை கடவுளின் சதியா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
என்றும் ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

