ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவமணி சிவலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவமணி சிவலிங்கம்

வயது 7324 ஜூன், 1944 – 31 மே, 2018

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவமணி சிவலிங்கம் அவர்கள் 31-05-2018 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், ஐயம்பிள்ளை சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வீரகத்தி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி சிவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுபகர்ணன் மற்றும் லிங்கேஸ்வரி, சிவவதனா, தயானந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற நவமணி(செல்லம்) மற்றும் கந்தசாமி, சிந்தாமணி, ராசமணி, பொன்னுச்சாமி, லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரஞ்சனி, சிவதாசன், சிவமூர்த்தி, செந்தில்குமார் ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு, கணேசபிள்ளை, மதியாபரணம், சிவகுரு மற்றும் சண்முகலிங்கம், பேரம்பலம், காலஞ்சென்றவர்களான இராசசிங்கம், முத்துராசா, சுந்தரமணியம் மற்றும் விஜயலட்சுமி, சிவநிதி, தேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிகாசினி, சியான்சி, நிதர்ஷா, அட்சனா, இளங்குமரன், வேணுயன், கீர்த்திகன், சுபாணு, அபூர்வன், அட்சயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 02-06-2018 சனிக்கிழமை அன்று காலை முதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 100/4,
கல்லூரி வீதி,
கொழும்பு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.