1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவநேசன் பத்மரூபி
முன்னாள் ஆசிரியை- Jaffna Holy Family Convent, Vavuniya Holy Cross Convent, Negombo Wijeyaratnam Hindu Central College
வயது 4915 ஏப்ரல், 1967 – 16 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு, பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவநேசன் பத்மரூபி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் சொந்தங்கள் அருகிருந்தும் -அம்மா
உங்களின் அன்பிற்கு ஈடாகுமா ?
நெஞ்சடைக்கும் நினைவுகளால்
நித்தமும் நாம் கலங்குகின்றோம்
ஒருமுறை வந்து எங்கள்
துயர்துடைக்க வேண்டாமா?
தேவதை அம்மாவை தொலைத்து விட்டோம்
எங்களை தெய்வங்கள் கூட கை விட்டதோ!
என் மனதோடு போராடும் -
உன் மறையாத ஞாபகங்கள்
எனை என்றும் வாட்டுதையோ !
ஆறா துயர் தந்து மீளாத்துயில் கொண்டாய்
வருவாய் என்று நான் -
காத்திருந்த காலங்கள் இன்று
ஆண்டு ஒன்று ஆகியது
ஓராண்டு என்ன-
ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
ஆறாது என் துயரம்
எழுந்தோடி வந்து எங்கள்
துயர் துடைக்க மாட்டாயோ !
கனவுகள் நிறைவேறும் காலமதில்
காலன் அவன் அழைத்து விட்டான்
உங்கள் கனவை கலைத்து விட்டான்
யாருக்கு யார் ஆறுதல் சொல்வதென்று தெரியாது
கலங்கி நிற்கின்றோம்
எமையெல்லாம் தேற்றுதற்காய்
இனியொருக்கால் -வாரீரோ?
தெய்வமாயிருந்து எமையெல்லாம் காப்பீரோ?
உங்கள் ஆன்மா சாந்தி பெற இறைவனிடம் பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள்,
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

