நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசம்பு நாகம்மா
Kaka Stores - உரிமையாளர்
வயது 8219 ஏப்ரல், 1937 – 18 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- பாண்டியன் குளம், பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு நாகம்மா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே! அம்மா மூன்று ஆண்டுகள்உங்களின் அரவணைப்பின்றித்தவிக்கின்றோம் நாங்களிங்கே!
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும் அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது! உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள் எல்லாம் பொற்காலங்கள் தான்!
அம்மா உங்களது அன்பான அரவணைப்பு, இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள், நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை இவைகளால் எல்லோராலும் போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது-ஆனால் முழு நினைவாக உயிர் எம்முடன் தான் இருக்குதம்மா...
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்...
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், தீவுக் கூட்டங்களில் பெரியதும், கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நெடுந்தீவில் 19/Apr/1937 இல் திரு.கந்தப்பு மரகதமொழி தம்பதிகளின் அருமை மகளாய் நாகம்மா அவர்கள் நாகேந்திரம், பொன்னம்மா, பார்வதிப்பிள்ளை, குமாரசாமி, சிவகாமிப்பிள்ளை, மருதையினார் மற்றும் வெற்றிவேல் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் இராமுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் திரு.சிவசம்பு என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சறோஜா, பிரபாகரன், ரசிகரன், குலசேகரன், சந்திரசேகரன், ஞானசேகரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து பாலசுப்பிரமணியம், சாமினி, சிவசோதி, விஜிதா, கலாஜினி, சிவானந்தி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ரம்யா, மது, வினோத், புருசோத், பிரதாப், மேனுஜா, சத்துருனியா, விக்ரம், மரகதம், மதுரா, கௌதம், அபிநயா, அஸ்வின், மிதுஷா, குசால், கிருஸ்னா, சேரன், அருண் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் Kaka stores உரிமையாளரான இவரை புஸ்பம் என அன்பாக அழைப்பதுடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார் இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 18.07.2019 இல் 82 வயதில் பிரித்தானியாவில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு மலரே
......அன்னை முகமே
அணைத்து மகிழ்ந்த
......ஆசை உயிரே
அன்பு உறவு ஒன்று
....அகிலம் துறந்தது
அன்னை மடியின்
.....வாசம் பிரிந்தது"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

