ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் பாஸ்கரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் பாஸ்கரன்

வயது 4129 ஆகஸ்ட், 1977 – 15 மே, 2019

பிறந்த இடம்
கண்டாவளை
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

கிளிநொச்சி கண்டாவளை வெளிக்கண்டன் சந்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 7ம் வட்டாரம் ஊரதீவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பாஸ்கரன் அவர்கள் 15-05-2019 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

செல்வராணி(ஜேர்மனி), காலஞ்சென்ற வரதராஜன், யோகராணி(பிரான்ஸ்), தவராணி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரன்(ஜேர்மனி), துரைரெத்தினம்(பிரான்ஸ்), கலைச்செல்வன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ், சகானா, சிவதீஸ், ஆகாஷ், ஆஷா, ஆர்த்திகா, சஜானுசன், சாருஷன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

கிளிநொச்சியில் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கண்டாவளை வெளிக்கண்டன் சந்தியில் 29/Aug/1977 ஆம் ஆண்டு சோமசுந்தரம் தங்கம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக பாஸ்கரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செல்வராணி, வரதராஜன், யோகராணி, தவராணி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சதீஸ், சகானா, சிவதீஸ், ஆகாஷ், ஆஷா, ஆர்த்திகா, சஜானுசன், சாருஷன் ஆகிய அற்புத பிள்ளைகளின் மாமனாக கடமை செய்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அப்பன் என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார் இவ்வாறு சகோதரங்கள்,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 15.05.2019 இல் 41 வயதில் புங்குடுதீவு 7ஆம் வட்டாரம் ஊரதீவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

கிளிநொச்சி மண்ணின்
......கீர்த்தி நிறைந்தவனே
கீச்சிடும் சிட்டுப் போல்
.......அழகு நிறைந்தவனே
இளமை வயதில்
.....இடையில் பிரிந்து
இமை மூடாது அழுது
.......தவிக்க விட்டதேனோ

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.