ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்ரமணியம் சுகுமாரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்ரமணியம் சுகுமாரன்

ஓய்வுபெற்ற வாழைச்சேனை காகித தொழிற்சாலை உத்தியோகத்தர்

வயது 8512 அக்டோபர், 1934 – 6 நவம்பர், 2019

பிறந்த இடம்
சிங்கப்பூர்
வாழ்ந்த இடம்
சங்கானை, வாழைச்சேனை, Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சிங்கப்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். சங்கானை, மட்டக்களப்பு வாழைச்சேனை, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் சுகுமாரன் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்ரமணியம் சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுபீதகுமார்(ரகு- Anchor Kitchen cabinet inc- கனடா), ரவீந்திரகுமார்(ரவி- கனடா), சுரேஷ்குமார்(சுரேஷ்- (Jencishop-biel- சுவிஸ்), சுரேந்திரகுமார்(சசி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லோகராஜினி(கனடா), சலுஜா(கனடா), லதா(சுவிஸ்), வனிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, இராசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கிருசன், ஜாகுலன், கீர்த்திகா, அருண், அணோஸ்டன், ஜென்சி, சாய்யிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ள சிறிய தீபகற்பமும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்குவதுடன் சிறந்த துறைமுகங்களைக் கொண்ட அழகு நிறைந்த சிங்க நகரமான சிங்கப்பூரில் 12/OCT/1934 ஆம் ஆண்டில் திரு.திருமதி சுப்ரமணியம் சின்னச்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு பாசமிகு மகனாக திரு.சுகுமாரன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நடராஜா,இராசம்மா எனும் சகோதரிகளுடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி கனகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான மகேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரும் சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக சுபீதகுமார், ரவீந்திரகுமார், சுரேஷ்குமார், சுரேந்திரகுமார் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து நல் கல்வியை புகட்டி பெரியவர்களானதும் லோகராஜினி, சலுஜா, லதா, வனிதா போன்றவர்களைத் திருமணம் முடித்து வைத்து கிருசன், ஜாகுலன், கீர்த்திகா, அருண், அணோஸ்டன், ஜென்சி, சாய்யிகா எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் சங்கானை மற்றும் மட்டக்களப்பு வாழைச்சேனையில் வாழ்ந்த இவர் வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை உத்தியோகத்தராக சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன் , அதிக அன்பு கொண்டவரும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் . 06.11.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சிங்கப்பூர் சிங்கமே அங்கம் வருந்தி உழைத்தவரே
பங்கம் இல்லா நல் உள்ளமே
எங்கள் மனதில் நிலையாய் நிலைத்து
எங்கே போனீர் எமை விட்டு
உங்கள் நினைவில் நித்தம் மூழ்கித் தவிக்கிறோம்

பிற அறிவித்தல்கள்

  1. 5 டிசம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.