ஆறுதல்

மரண அறிவித்தல்

சுதர்ஷன் கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுதர்ஷன் கந்தசாமி

வயது 3414 ஆகஸ்ட், 1984 – 26 ஜூன், 2019

பிறந்த இடம்
நாவற்குழி
வாழ்ந்த இடம்
Oberhausen

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கைதடி நாவற்குழி மறவன்புலவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுதர்ஷன் கந்தசாமி அவர்கள் 26-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பு கந்தையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

கந்தசாமி கமலதேவி(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி கமலநாதன்(ஜேர்மன்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிசிலின் அவர்களின் அன்புக் கணவரும்,

சஹானா, சாரா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செந்தூர், செந்தூர்வேல்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வினோத், சிந்துஜா, தனுஷன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

விஜயகுமார் தவமலர் தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

மிதுனன், விஜிந்த், தர்மிளா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய நெல்வயல்கள் சூழ்ந்த இடமும்,வீட்டுத்தோட்டம்,பயன்தருமரங்களும், படித்த மக்களைக் கொண்ட பிரதேசமும் பண்புள்ளம் நிறைந்த மக்களாக உள்ள சாவகச்சேரி மறவன்புலவில் 14/AUG/1984 இல் திரு திருமதி கந்தசாமி கமலதேவி தம்பதிகளின் அன்பு மகன் திரு.சுதர்ஷன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் செந்தூர், செந்தூர்வேல் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து சுப்பு கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் மடிமீது பேரனாக தவழ்ந்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி கமலநாதன் தம்பதிகளின் அருமைப் புத்திரி சிசிலின் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சஹானா, சாரா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பண்பாக வளர்த்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 26.06.2019 இல் 34 வயதில் ஜேர்மனியில் உள்ள Oberhausen நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

இளமை உருவே எங்கள்
இளம் தென்றலே
வளம் நிறைந்த அறிவே
வாழ்வில்
களங்கம் அற்ற கங்கையாய்
பாதை வகுத்து ஓடி
பாதியில் போனதேன்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.