1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தையல்நாயகி மாணிக்கவாசகர்
ஓய்வுபெற்ற ஆசிரியை
வயது 9028 ஜூலை, 1928 – 29 மே, 2019
- பிறந்த இடம்
- சாவகச்சேரி
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தையல்நாயகி மாணிக்கவாசகர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் குடும்ப விளக்காக நின்று
எம்மை தவிக்கவிட்டு இன்றோடு
ஆண்டு ஒன்று கடந்தாலும்,
என்றும் நீங்காத நினைவுகளுடன்
எம் நெஞ்சில் நீங்கள் என்றும்
நீங்காத சுடராய் வாழ்கின்றீர்கள்!
கண்ணின் கருமணியாய் காத்த எம்மை
இன்று கண்ணீர் மல்க விட்டு
சென்றதேனோ?
விண்ணில் விடிவெள்ளியாய் போன பின்பும்
எங்கள் விழியில் ஈரம் தனை தந்ததேனோ?
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
என்றென்றும் உங்கள் நினைப்பில் நாமிருப்போம்!!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
என்றும் கல்வயல் பெரும்குளம் பிள்ளையார் காலடியில் நித்தியசாந்தி பெற
அவர் துணை வேண்டி நிற்கின்றோம்.
அன்றைய தினத்தில் எனது தாயாரின் பெயரால் சிறிய உலர் உணவுப் பொதிகள் அன்பளிப்பு செய்யப்படும்.தவறுதலாக யாரினதும் பெயர்கள் விடுபட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளும்படி தாள்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
— மா.தை. மனோகரன் - மகன்
வாழ்க்கை வரலாறு
சாவகச்சேரி, கல்வயல் ஊரை சேர்ந்த பலராலும் ரீச்சர், எனவும் தையல் எனவும் பாசத்தோடும் பரிவோடும் அழைக்கப்பட்ட மண்ணுலக வாழ்வை துறந்து 29.05.2019 அன்று தொலைபேசி வழியாக அவர்தம் மூத்தமகனின் அம்மா உங்கள் மகன் mano கதைக்கிறேன் என்று கூறிய மறுகணம் இறை பதம் அடைத்துள்ழார். அன்று தொட்டு கடைசிவரை தேவி என்ற அயலவ பெண்நினால் டீச்சர் டீச்சர் என அழைக்கப்பட்டவர். அன்னார் கடமை யாற்றிய பாடசாலைகள் கல்வயல் ஷண்முகானந்த வித்யாலயம்,மட்டுவில் மஹாவித்யாலயம், நுணாவில் சரஸ்வதி வித்யாலயம், பாவற்குளம் மஹாவித்யாலயம் வவுனியா convent.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

