ஆறுதல்

மரண அறிவித்தல்

தம்பையா இராசேந்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தம்பையா இராசேந்திரம்

முன்னாள் கிளை முகாமையாளர், சுன்னாகம் ப.நோ.கூ.சங்கம்

7 டிசம்பர், 2016

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
சுன்னாகம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் தெற்கை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தம்பையா இராசேந்திரம் அவர்கள் 07-12-2016 புதன்கிழமை அன்று சுன்னாகத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நடராசா பொன்னம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,

லீலாவதி(இளைப்பாறிய ஆசிரியை- மல்லாகம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற மைதிலி, தர்மினி(பிரான்ஸ்), முரளீதரன்(பிரான்ஸ்), குமுதினி(லண்டன்), கமலினி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

வாலாம்பிகை, ராசமணி, முருகையா, சண்முகநாதன், தர்மசோதி, பாமா, வரதா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சசிகரன்(பிரான்ஸ்), தர்மிகா(பிரான்ஸ்), தயாபரன்(லண்டன்), அகிலன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவலிங்கசோதி, விமலாவதி, சிவானந்தசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சைலஜன், சாஜிதன், சௌகல்யா(பிரான்ஸ்), கபிசன், சதுசன், பைரவி(பிரான்ஸ்), தரணியா, திசானி, தனிஸ்கா(லண்டன்), அனுசன், அபிசா(நெதர்லாந்து) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-12-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
சுன்னாகம் தெற்கு,
சுன்னாகம்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.