நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தம்பிப்பிள்ளை சிவராசா
வயது 686 அக்டோபர், 1950 – 8 மே, 2019
- பிறந்த இடம்
- ஏழாலை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "
எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும், உற்றார், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்.ஏழாலையில் 06/OCT/1950 இல் தம்பிப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சிவராசா அவர்கள் தங்கரத்தினம், பரமேஸ்வரி, சிவலிங்கம், பராசக்தி, சிவஞானம், சிவானந்தம் போன்ற உடன் பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், நவரட்ணம் ஜெயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் நந்தினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கோபிராஜ், துஷாரா ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், அனோஜன், சரண்யா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன்.டியானா, டேவேஷ் போன்ற பேரப்பிள்ளைகளோடு மகிழ்வுற்று வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.05.2019 இல் 68 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"ஏழாலை தந்த
.... எங்கள் உறவே
எல்லோர் மீதும்
......அன்பு கொண்டு
பாசம் கொண்ட
....இரக்க குணமே
எம்மை விட்டு
....எங்கே சென்றீர் "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

