மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தாமோதரம்பிள்ளை கனகசபை
ஜெயா பேக்கரி உரிமையாளர், இயக்குனர் Dero Export Intl Ltd
வயது 8230 செப்டம்பர், 1934 – 28 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கனகசபை அவர்கள் 28-01-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகசேகரம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கீர்த்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரேம்குமார்(Premier Brand, DeroExport- Colombo), சாந்தகுமார்(சுட்டி- Shaae Cash and Carry, Paris),ஜெயசேகரன்(Jay brand, New oceon- Canada), விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பத்மநாதன், சண்முகராஜா, பொன்னம்பலம், மற்றும் நாகேந்திரன், சிவலிங்கம், மனோரஞ்சன், முத்துகுமாரசுவாமி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரியதர்சினி, ரஜினி, துஷானி, மக்சி(Aloy Expo- Colombo) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷன்ஜிட், ஷாயினி, பிராஷினி, டினேஷ், டிலானி, டுலக்ஷன், டாலியா ஆகியோரின் பாசமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 44/A, Park Road Bangalawatte, Mabole, Wattala என்னும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 30-01-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று அதனைத்தொடர்ந்து பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

