ஆறுதல்

நன்றி நவிலல்

தண்டபாணிதேசிகர் நாகேஸ்வரி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தண்டபாணிதேசிகர் நாகேஸ்வரி

வயது 708 செப்டம்பர், 1949 – 25 டிசம்பர், 2019

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
மல்லாகம், பரந்தன், Epinay

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், பரந்தன், பிரான்ஸ் Epinay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தண்டபாணிதேசிகர் நாகேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அளவெட்டியில் 08/SEP/1949 இல் திரு.திருமதி ஆறுமுகம் பரமேஸ்வரி தம்பதிகளுக்கு அழகுக் குழந்தையாக நாகேஸ்வரி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சக்திவேல் எனும் சகோதரத்துடன் குறும்பு செய்து வளர்ந்து பெரியவராகியதும், திரு.திருமதி நடராஜா, மீனாம்பிகை தம்பதிகளின் மகனான சாரதிப்பயிற்சி ஆசிரியரான திரு.தண்டபாணிதேசிகர் எனும் அறிவு நிறைந்த ஆண் மகனைத் திருமணம் முடித்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக ஸ்ரீமதி, ஜெயமதி, சுமதி, இந்துமதி, மதிதரன், சுதாமதி, மதிமுகன், மதிமாறன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தனர்

முழுக் கதையையும் வாசிக்க

பிள்ளைகள் பெரியவர்களாகியதும் திருக்குமார், சிவசண்முகம், ஸ்ரீதரன், மகாதேவன், வித்யா, மோகன்ராஜ் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து றஜிதா, ஸ்ரீநாத், சுகனியா, செல்வமோகன், செந்தூரன், பிரவீன்குமார், நிறோசனா, நிஷாந், டனிசியா, டனுசன், டிசாந், ஷகிஷ்ணா, ஹரிஷ்னா, சஹானா, அபூர்வா, அப்சரா, நேத்ரா, அனுத்ரா எனும் பேரப்பிள்ளையுடனும், நட்சத்திரா, சனா ஆகிய பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் நாகேஸ் என அனைவராலும் அழைக்கப்படுவதுடன் எப்போதும் தெய்வ நம்பிக்கை கூடிய இவர் மகிழ்ச்சியாக காலத்தைக் கழித்ததுடன், வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பதும், சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.

இவ்வாறு கணவர், பிள்ளைகள், சகோதரங்கள்,பூட்டப்பிள்ளைகள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 25.12.2019 இல் 69 வயதில் பிரான்ஸில் உள்ள Epinay நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

அளவெட்டி மண்ணின் அன்னை உறவே
வழமையான புன்னகையுடன் ஒலிக்கும் தாயே
கலக்கம் அற்ற எங்கள் கருணை ஒளியே
விளங்கினீரே ஒளிரும் நிலவு வதனமுடன்
கலங்குகிறோம் எமைவிட்டு எங்கே பிரிந்து சென்றீர்

பிற அறிவித்தல்கள்

  1. 30 டிசம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.