ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கமலர் இரத்தினசபாபதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கமலர் இரத்தினசபாபதி

வயது 888 மார்ச், 1931 – 2 நவம்பர், 2019

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
இணுவில், கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், இணுவில், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கமலர் இரத்தினசபாபதி அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் தில்லையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினசபாபதி(உதவி உணவு கட்டுப்பாட்டாளர், காரியதரசி கொழும்பு கூட்டு வைத்தியசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,

கலா(ஐக்கிய அமெரிக்கா), கௌரி(கனடா), காயத்திரி(அவுஸ்திரேலியா), கல்யாணி(பிரித்தானியா), கௌசல்யா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சகாதேவன்(ஐக்கிய அமெரிக்கா), சிறிதரன்(கனடா), பாலேந்திரன்(அவுஸ்திரேலியா), ரவிக்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சண்முகசுந்தரம், மகேஸ்வரி, காலஞ்சென்ற சுந்தரலிங்கம், கமலாதேவி, சறோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மாதவி, ஜனனி, ஷாலினி, ஆனந்த், விக்னேஸ், வைஷ்ணவி, கார்த்திக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 08/MAR/1931 ஆம் ஆண்டில் திரு.திருமதி தம்பிமுத்து ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளுக்கு அழகுக் குழந்தையாக தங்கமலர் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்பு செய்து வளர்ந்து பெரியவராகியதும், அழகிய ஆண் மகன் உதவி உணவு கட்டுப்பாட்டாளர்,காரியதரசி கொழும்பு கூட்டு வைத்தியசாலையில் கடமையாற்றிய இரத்தினசபாபதி எனும் வீரம் நிறைந்த ஆண் மகனை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.இருவரின் வாழ்க்கைப் பயணத்தில் வம்ச விருத்தியாக கலா, கௌரி, காயத்திரி, கல்யாணி, கௌசல்யா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தார். பிள்ளைகள் பெரியவர்களானதும் சகாதேவன், சிறிதரன், பாலேந்திரன், ரவிக்குமார் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாதவி, ஜனனி, ஷாலினி, ஆனந்த், விக்னேஸ், வைஷ்ணவி, கார்த்திக் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இணுவிலில் வாழ்ந்தது மட்டுமல்லாது கொழும்பிலும் பல காலம் வாழ்ந்த இவர் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 02.11.2019 இல் 88 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

மலேசியா மண்ணின் மங்கா விளக்கே
அன்பு மழை பொழியும் அற்புத உறவே
புன்னகையுடன் வாழ்ந்த எங்கள் அன்னையே
அன்பில் உயர்ந்த ஆருயிர் முத்தே
கண் மூடி நினைக்க விம்பமாய்
தொடரும் நினைவே அன்னையே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.