ஆறுதல்

மரண அறிவித்தல்

தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தங்கம்மா சிவசுப்பிரமணியம்

ஓய்வுபெற்ற அதிபர்- வட்டக்கச்சி தெற்கு அ.த.க பாடசாலை

வயது 8024 நவம்பர், 1935 – 13 ஆகஸ்ட், 2016

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
Vaddakkachchi, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தங்கம்மா சிவசுப்பிரமணியம் அவர்கள் 13-08-2016 சனிக்கிழமை அன்று வட்டக்கச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், நெடுந்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையா கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்டப் புதல்வியும், புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பாஸ்கரன்(தயா- லண்டன்), புஸ்பகரன்(ஜெயா- இத்தாலி), சோதீஸ்வரி(ஜெயந்தி- லண்டன்), சிவனேஸ்வரி(சாந்தி- லண்டன், முன்னாள் ஆசிரியை- வட்டக்கச்சி தெற்கு அ.த.க பாடசாலை), காலஞ்சென்ற திலகேஸ்வரி(வசந்தி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், லட்சுமி, பசுபதி, கனகமலர், மற்றும் பொன்னுத்துரை, தர்மலிங்கம், லோகநாதன்(முன்னாள் தபால் அதிபர்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சதாம்பிகை(சசி- லண்டன்), பொன்மலர்(மாலா- இத்தாலி, முன்னாள் ஆசிரியை, பரந்தன் இந்து மகாவித்தியாலயம்), சண்முகலிங்கம்(சக்தி- லண்டன்), பிறேமகுமார்(பிறேம்- லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மசூரியலிங்கம், சர்வலோகலட்சுமி, வீரகுலசிங்கம், விசாலாட்சி, சிவஞானம், சரோஜினிதேவி, மற்றும் மங்களேஸ்வரி, தெய்வயானை, நிர்மலாதேவி, சுசீலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவாகரன், ஜாபேஷ், மிதுஷா, சீதுஷா, சுலக்‌ஷன், அனுஷன், தனுஜா, வினுஜா, அபிஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-08-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 07:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வட்டக்கச்சி மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல 908,
கட்சன் வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.