மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தங்கரத்னம் மகேஸ்வரன்
வயது 8324 ஆகஸ்ட், 1936 – 24 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்னம் மகேஸ்வரன் அவர்கள் 24-08-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்திரை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சம்பந்தர் ஆனந்தசபாபதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகேஸ்வரன்(Assistant Commissioner of Co-Operative) அவர்களின் அன்பு மனைவியும்,
உதயகுமார்(Engineer- பிரித்தானியா), வஸந்தன் (H & Me Fine cars- உரிமையாளர்), மஞ்சுளா(Defence Ministry-நோர்வே), கோபி(CIBC- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஷ்பா(Lister Hospital- பிரித்தானியா), நிர்மலா(Former employee, Commercial Bank- இலங்கை), கிரிஷாந்தி (CIBC-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முருகையா(Engineer- ஐக்கிய அமெரிக்கா), சுப்பிரமணியம்(Accountant- அவுஸ்திரேலியா), வடிவேலு(Engineer- பிரித்தானியா), மகேஸ்வரி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கந்தையா, ஆறுமுகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கௌதம், சிந்தியா(பிரித்தானியா), சிந்துஜன், ஆதவன், பிரணவன்(கனடா), சரண்யா, ஜனனி(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின்கல்வியறிவு கூடிய பிரதேசமும் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமுமான திருநெல்வேலியில் 24/AUG/1936 இல் திரு.திருமதி சின்னத்திரை தம்பதிகளின் அருமை மகளாய் தங்கரத்தினம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
முருகையா, சுப்பிரமணியம், வடிவேலு, மகேஸ்வரி, கந்தையா, ஆறுமுகம் எனும் சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சம்பந்தர் ஆனந்தசபாபதி தம்பதிகளின் அருமை மகனான Assistant commissioner of co-operative ஆன மகேஸ்வரன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக உதயகுமார்,வஸந்தன்,மஞ்சுளா,கோபி போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து புஷ்பா, நிர்மலா, கிரிஷாந்தி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து கௌதம், சிந்தியா, சிந்துஜன், ஆதவன், பிரணவன், சரண்யா, ஜனனி எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 24.08.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
கண்ணாடி வதனக் காதல் விழியால்
பண்பை ஊட்டிய பாச மலரே
சிரித்து மகிழ்ந்து சிரம் ஏற்ற
சரித்திர உறவே சரிந்தீரே மண்ணில்
விரித்த இறகொடிந்த பறவை போல்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

