ஆறுதல்

மரண அறிவித்தல்

தயாநிதி தர்மபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தயாநிதி தர்மபாலன்

வயது 5521 நவம்பர், 1963 – 12 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 10ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
ப்றீமென்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தயாநிதி தர்மபாலன் அவர்கள் 12-09-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நல்லையா பரமேசுவரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தர்மபாலன் அவர்களின் அன்பு மனைவியும்,

மதுரா, துவீபகன், கவிந்தன், மகீபன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஏனோ, திரேஸ், ஏவா, யூலியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரபாலன், புனிதவதி, காலஞ்சென்ற திருவாசகம், ஞானசம்பந்தன், ஜீவலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுந்தரலிங்கம், கன்னிகா, லோகேஸ்வரி, சுதா, கருணாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சஜீதன், அருண், சுரதா, சங்கீதா, தர்சன், தர்சா, தீபிகன், சயந்தன், சுவேதா ஆகியோரின் அன்பு மாமியும்,

ரஜனி, ரதி, விஜிதா, திவாகரன், ரூபா, சபி, தர்சா, நந்தா, காலஞ்சென்ற தினேஸ் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,

ஜொனார்தன், பெனாயா, சந்தோஷ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

அபியா, லூக்தம்பி, சாமு, தயாமட்லின், லண்டன், சாம், ஆதம் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

புங்குடுதீவில் பிறந்து வளர்ந்து ஜேர்மனியில் சந்தோஷமாகவும் குகூகலமாக வாழ்ந்த அன்புத் தாய் தயாநிதி அவரின் வாழ்க்கைப் பக்கங்களில் சில தொடர்கிறன....

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் 21/NOV/1963 இல் திரு.திருமதி கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான தயாநிதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நல்லையா பரமேசுவரி தம்பதிகளின் அழகிய ஆண் அழகான தர்மபாலன் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மதுரா, துவீபகன், கவிந்தன், மகீபன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஏனோ, திரேஸ், ஏவா, யூலியா என்பவரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த ஜொனார்தன், பெனாயா, சந்தோஷ், அபியா, லூக்தம்பி, சாமு, தயாமட்லின், லண்டன், சாம், ஆதம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 12.09.2019 இல் 55 வயதில் ஜேர்மனியில் உள்ள Bremen நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

அம்மா அம்மா அழகு உருவே அன்பு உள்ளமே
ஆழ்ந்த பண்பு கொண்ட இனிமை உறவே - எங்களை
ஈன்ற உயரிய உயிரே உங்கள் நினைவால் உருகி
ஊரே கவலையில் தவிக்கிறது எங்கே போனீர்
ஏங்குகிறோம் தாயே

பிற அறிவித்தல்கள்

  1. 12 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 12 செப்டம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.