1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
தயாநிதி தர்மபாலன்
வயது 5521 நவம்பர், 1963 – 12 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 10ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- ப்றீமென்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தயாநிதி தர்மபாலன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காத்திருக்க நேரமில்லை- காலங்களுக்கு
கண்ணீரோடு கடந்தது ஒரு வருடம்
எண்ணிய போது
ஈரமானது கண்கள் ! கனமானது இதயம்!
ஆயிரம் ஆயிரம் கஷ்டங்கள்
அத்தனையும் எங்களுக்காக
நாங்கள் எண்ணியது பல உண்டு
உங்களுக்காக ஏமாற்றமே எமதானது
மனம் ஏங்கி தவிக்கின்றது
உங்களை காண உங்கள் குரல் கேட்க
காரணம் தெரியவில்லை
மனதுக்கு நீங்கள் இல்லையென்று புரியவில்லை
நினைவுகள் மட்டும் மிஞ்சுகிறது
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை
தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன் குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
புங்குடுதீவில் பிறந்து வளர்ந்து ஜேர்மனியில் சந்தோஷமாகவும் குகூகலமாக வாழ்ந்த அன்புத் தாய் தயாநிதி அவரின் வாழ்க்கைப் பக்கங்களில் சில தொடர்கிறன....
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் 21/NOV/1963 இல் திரு.திருமதி கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளான தயாநிதி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நல்லையா பரமேசுவரி தம்பதிகளின் அழகிய ஆண் அழகான தர்மபாலன் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக மதுரா, துவீபகன், கவிந்தன், மகீபன் எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஏனோ, திரேஸ், ஏவா, யூலியா என்பவரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த ஜொனார்தன், பெனாயா, சந்தோஷ், அபியா, லூக்தம்பி, சாமு, தயாமட்லின், லண்டன், சாம், ஆதம் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 12.09.2019 இல் 55 வயதில் ஜேர்மனியில் உள்ள Bremen நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
அம்மா அம்மா அழகு உருவே அன்பு உள்ளமே
ஆழ்ந்த பண்பு கொண்ட இனிமை உறவே - எங்களை
ஈன்ற உயரிய உயிரே உங்கள் நினைவால் உருகி
ஊரே கவலையில் தவிக்கிறது எங்கே போனீர்
ஏங்குகிறோம் தாயே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

