நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலகநாயகி ஜெயராஜா
வயது 7927 மார்ச், 1940 – 7 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வட்டுக்கோட்டை
- வாழ்ந்த இடம்
- வவுனியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், உலக நாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 27/MAR/1940 இல் ஞானப்பிரகாசம் பத்மாவதி தம்பதிகளின் அன்பு மகளாக திலகநாயகி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
குணநாயகி, ஜீவலட்சுமி, பரமநாயகம், நேசநாயகம், சூரியகுமாரன், ரேவதி, தனபதி, கயிலநாதன், துரைசிங்கம், ஜெயலிங்கம், போஜலிங்கம், கந்தகௌரி, இந்திரகுமாரன், சந்திரகுமாரன் போன்ற சகோதரங்களுடன் குறும்புகள் செய்து வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி நமசிவாயம் தம்பதிகளின் அன்பு மகனான, ஜெயராஜா அவர்களை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
இவ்வாறு பெற்றோர், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 79 வயதில் இலங்கையில் இறைபதம் அடைந்தார்.
”எப்போதும் புன்னகை முகமுடன்
புதுமலர் போல் சிரித்திடும்
கருனை உறவே
கலங்கி அழுகிறோம்
வருக ஒருமுறை
தருக இன்பத்தை
எழுக எம் பாச மலரே”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

