ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

தில்லை அனுஜன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தில்லை அனுஜன்

வயது 292 டிசம்பர், 1987 – 18 டிசம்பர், 2016

பிறந்த இடம்
Lausanne
வாழ்ந்த இடம்
Lausanne, Chavornay

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், Lausanne, Chavornay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லை அனுஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்றாகியும் மாறவில்லை
உன் மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!

நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?

மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்!!!

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு சுவிசிலிருந்தும், பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் நேரிலும், தொலைபேசி, மற்றும் இணையத்தளவாயிலாகவும் தொடர்பு கொண்டு துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள், பொது அமைப்புக்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 21-01-2017 சனிக்கிழமை அன்று மதியம் Grand Salle, Rue Du Verneret, 1373 Chavornay, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 21 டிசம்பர், 2016மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 15 டிசம்பர், 20171ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.