31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Thillai Anujan
Age 29December 2, 1987 – December 18, 2016
- Born in
- Lausanne
- Lived in
- Lausanne, Chavornay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசுவிஸ் Lausanne ஐப் பிறப்பிடமாகவும், Lausanne, Chavornay ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தில்லை அனுஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மாதம் ஒன்றாகியும் மாறவில்லை
உன் மறைவு வலி
உன் சட சட பேச்சும்
உதட்டோரப் புன்னகையும்
என்றும் எம் மனங்களில் வீற்றிருக்கும்!
நாம் கண் தூங்க நினைத்தாலும்
விழிமடல் முழுதும் நீ தானே!
நிறைந்து நிற்கின்றாய்
நீண்டு நீ வாழ வேண்டும்
என்றே தானே நாம் விழித்திருந்தோம்
இடை நடுவில் எமைப் பிரிய
நாம் என்ன பாவம் செய்தோமோ?
மீண்டும் நீ வந்திட
ஒரு விந்தை தான் நிகழாதோ?
வித்துடல் மறைந்தாலும்
உன் நினைவுகள்
என்றும் எம்முள் புதைந்திருக்கும்!!!
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு சுவிசிலிருந்தும், பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் நேரிலும், தொலைபேசி, மற்றும் இணையத்தளவாயிலாகவும் தொடர்பு கொண்டு துயரை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், மற்றும் வர்த்தக ஸ்தாபனங்கள், பொது அமைப்புக்கள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அவரது ஆத்மசாந்திப் பிரார்த்தனை 21-01-2017 சனிக்கிழமை அன்று மதியம் Grand Salle, Rue Du Verneret, 1373 Chavornay, Switzerland என்னும் முகவரியில் நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

