மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைநாயகி ஜெகதீசன்
வயது 7518 ஜூலை, 1945 – 24 பிப்ரவரி, 2021
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, கரந்தன், தெல்லிப்பழை, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி, கரந்தன், தெல்லிப்பழை ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாயகி ஜெகதீசன் அவர்கள் 24-02-2021 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை கற்பகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகதீசன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜதுநந்தனன்(ஜது), ஜதுதீசன்(கபில்), ஜகந்தினி(கனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரேணுகா, கதிர்மதி, குமரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, சர்வேஸ்வரி, சண்முகநாதன், காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பஞ்சலிங்கம் மற்றும் அன்னலக்சுமி, காலஞ்சென்ற பேரானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜெசேரன், ஜெயந்தன், ஜெயகபிஷன், ஜெயஞ்சலி, அக்ஷயன், அஜிஷயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
கிருசன், ஜசானா, சஜானி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

