மரண அறிவித்தல்

திலகம் செல்வமணி வடிவேலு
ஆசிரியை, அதிபர், ஆங்கில கல்வி பணிப்பகத்தின் துணை இயக்குனர் - திருகோணமலை மற்றும் ஆசிரியை - Braintcroft Primary பாடசாலை, London Tamil Centre
வயது 82
பிறந்த இடம்: திருகோணமலைவாழ்ந்த இடம்: பிரித்தானியா, இலங்கை, திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், இலங்கை, பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திலகம் செல்வமணி வடிவேலு அவர்கள் 23-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 18:12 மணியளவில் பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வடிவேலு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,
பிரமிளா(சுவிற்சர்லாந்து), திருமளா(பிரித்தானியா), சர்மிளா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு வளர்ப்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சங்குபதி, பாக்கியதுரை, சங்கரதாஸ், பொன்னுத்துரை, மற்றும் சிவமணி, காசிலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இவர் திருகோணமலை ஆங்கில கல்வி பணிப்பகத்தின் துணை இயக்குனராக பணியாற்றியவர். மற்றும் Kinniya Muslim Girls Collegeல் பாடசாலை அதிபராகவும் இலங்கையில் பல பாடசாலைகளில் ஆசிரியையாகவும் பணிபுரிந்தவர். மேலும் திருகோணமலை மாவட்ட மகளிர் நலன்புரி அமைப்பின் அதிபராகவும், திருகோணமலை மாவட்ட சமாதான குழு, Save the Children and Red Cross organisationsல் உறுப்பினராக இணைந்தும், சுயமாகவும் பல நற்பணிகளுக்காக தம்மை அர்பணித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரித்தானியாவில் Braintcroft Primary பாடசாலை ஆசிரியையாகவும், LondonTamil Centre ஆசிரியையாகவும், சில காலங்கள் துணை அதிபராகவும் பணியாற்றியவர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் University of Central Lancashire(UK), University of Sydney(Australia), University of Colombo(Srilanka), Lady Doak College(Madurai- India) ஆகிய பல்கலைக்கழகங்களில் பட்ட படிப்பை முடித்தவர். மற்றும் Methodist Girls’ College(Trincomalee- Srilanka)வில் பள்ளி படிப்பை முடித்தவர்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

