மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருநாவுக்கரசு பாக்கியம்
வயது 873 மார்ச், 1932 – 3 மே, 2019
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் மாம்பழச் சந்தியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பாக்கியம் அவர்கள் 03-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திராதேவி, இராசேந்திரம், பவானிதேவி(லண்டன்), ஜெகநாதன், நிலாராணி(ஜேர்மனி), வசந்தாதேவி, குணசீலன், யோகராணி, சித்திராதேவி, பாஸ்கரன்(பாட்ஷா- லண்டன்), திலகவதி, புவனராணி, கஜரூபன் ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம் மாம்பழம் சந்தியடியில் 03/MAR/1932 ஆம் ஆண்டில் அழகிய குழந்தையாக பாக்கியம் அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் அழகு ஆண் மகனான திருநாவுக்கரசு என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து இந்திராதேவி, இராசேந்திரம், பவானிதேவி, ஜெகநாதன், நிலாராணி, வசந்தாதேவி, குணசீலன், யோகராணி, சித்திராதேவி, பாஸ்கரன், திலகவதி, புவனராணி, கஜரூபன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது குடும்பத்தில் அக்கறை கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 03.05.2019 இல் 87 வயதில் முல்லைத்தீவில் உள்ள புதுக்குடியிருப்பில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"முல்லையின் முத்தே
......எங்களின் சொத்தே
அன்பின் உறவே
......அழகின் சிகரமே
உறவுகளின் அணைப்பே
....உள்ளத்தின் மலையே
தூய நிலவே
.....தூங்கினாய் நிலையாய்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

