ஆறுதல்

மரண அறிவித்தல்

திருநாவுக்கரசு இராசரத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருநாவுக்கரசு இராசரத்தினம்

உரிமையாளர்- விஜிதா அரிசி ஆலை, தாவடி

9 ஏப்ரல், 2016

பிறந்த இடம்
வேலணை மேற்கு
வாழ்ந்த இடம்
கொழும்பு, தாவடி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், யாழ். தாவடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு இராசரத்தினம் அவர்கள் 09-04-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு தர்மலெட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற யோகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

கல்யாணி, கலைவாணி, கருணாகரன்(லண்டன்), இரவீந்திரன்(லண்டன்), விஜிதா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நகுலேஸ்வரி(லண்டன்), நவரட்ணம்மா(லண்டன்), மங்கையர்க்கரசி(ஓய்வுபெற்ற ஆசிரியை- இந்து மகளிர் கல்லூரி), சீவரத்தினம்(நந்தலாலா இரும்பகம்), மீனாம்பாள்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

Dr.சுரேஸ்(ஆதார வைத்தியசாலை- தெல்லிப்பளை), சுபாஸ்சந்திரன்(கணக்காளர்- கொழும்பு), பிரகலதா(லண்டன்), பதிமிலா(லண்டன்), காண்டீபன்(பொறியியலாளர்- கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்(A.K.T), சிவஞானம்(A.K.S), திருநாவுக்கரசு(விகடகவி, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி), மற்றும் தயாளன்(கணக்காளர்- கனடா), சிவகலை, காலஞ்சென்ற பேரம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகம்மா அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

ஹரிணி, பிருந்தாபன், சுபாங்கி, டீபக், சுஜின், பிரிட்டிகா, சுகந், கிஷான், அக்‌ஷயா, அக்‌ஷானா, கிரிசாந் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 11-04-2016 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தாவடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல- 47,
ஆனைக்கோட்டை வீதி,
கொக்குவில் மேற்கு,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.