மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைரமுத்து வரதகுமார்
வயது 6911 மே, 1949 – 13 மார்ச், 2019
- பிறந்த இடம்
- மானிப்பாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரமுத்து வரதகுமார் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைரமுத்து, பூமகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற மீனா, பிரசன்னா(Sunny) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற சிவகுமார்(கனடா) மற்றும் நிருத்தகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
செந்தினி, தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
தமிழ் தகவல் நடுவம்(Tamil Information Centre-TIC) மற்றும் சமூக அபிவிருத்திநடுவம்(Centre for Community Development- CCD) ஆகிய அமைப்புகளின் ஸ்த்தாபக உறுப்பினரும் அவற்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் முன்னணி மனித உரிமை மற்றும் சமூக செயல்பாட்டாளருமான திரு. வைரமுத்து வரதகுமார் அவர்கள் பிரித்தானியாவில் 13-03-2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
திரு. வரதகுமார் அவர்கள் இலங்கையில் சிறுபாண்மை இனங்களின் உரிமைகளிற்காகவும் இலங்கைத் தீவின்அமைதி மற்றும் சமாதானத்திற்காகவும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் நலன்களிற்காகவும் பல தசாப்தங்களாக ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் செயலாற்றிய செயல்வீரன் என்பது அனைவரும் அறிந்ததே.
முழுக் கதையையும் வாசிக்க
ஒரு தலைமை மனித உரிமை மற்றும் மனிதாபிமான செயல்பாட்டாளனின் இழப்பால் துயருற்றிருக்கும் இவரது குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் இவரது சக செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் தமிழ் தகவல் நடுவம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
தனது சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் மீட்சிக்காகவும் மனித உரிமைகளிற்காகவும் ஓய்வின்றி தனது வாழ்நாட்களை அர்ப்பணித்து போராடிய திரு. வரதகுமார் அவர்கள் தனது இறுதி முயற்சியாக அடுத்த தலைமுறைக்கும் சர்வதேசத்திற்கும் இலங்கைத் தமிழர்களின் வரலாறு பூர்வீகம் பண்பாடு கலை கலாச்சாரம் தமிழர் மீது நடாத்தப்பட்ட அநீதிகள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி ஒரு மிகப்பெரும் கண்காட்சியையும் அதன் தொடர்ச்சியாக ஒரு வரலாற்று அருங்காட்சியகத்தையும் மற்றும் தமிழர்களுக்கென்று ஒரு நிரந்தர நினைவில்லத்தையும் அமைக்கும் முயற்சியில் ஓய்வின்றி உழைத்துக்கொண்டிருந்த போதே இறைவனடி சேர்ந்தார்.
ஒரு செயல் வீரனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை இளைய சமுதாயத்தினர் தற்போது முன்னெடுத்துள்ளதுடன் இப்பணிக்கு உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்கின்றனர்.
திரு. வரதகுமார் அவர்கள் ஆரம்பித்த அவ்வுன்னத பணியை முன்னெடுத்து அவர் திட்டமிட்டதை சரியாக நிறைவேற்றி முடிப்பதே இவருக்கு நாம் செய்யும் உண்மையான இறுதி வணக்கமாக இருக்கும்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

