ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

வைத்திலிங்கம் திவ்வியானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திலிங்கம் திவ்வியானந்தன்

உரிமையாளர்- Beauty International, Star Lighting, Home Decor

வயது 627 ஏப்ரல், 1955 – 16 அக்டோபர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் திவ்வியானந்தன்(சந்திரன்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்பின் அப்பா அழியாத ஓவியமே.!
அழைத்து விட்டாரோ ஆண்டவர் தம்முடனே?

நாட்கள் கடந்தாலும் ஆறாத உங்கள் பிரிவு
ஆறாய் ஓடுகின்றது தினம் தினம் எங்களின் கண்களில்.!

தினம் தினம் உங்களைத் தேடி கடைக்கு வரும் பலபேர்
தேடுகின்றார்கள் உங்களைக் காணாமல்.!
எப்படி சொல்வது - நீங்கள் இனிக்கடைக்கு
வரப்போவதில்லை என்ற சேதியை.!

ஒரு பிறையோடும் விடிவெள்ளியாய் வழிகாட்ட
இறைவனோடு இணைந்திட்ட உங்களுக்கு
கண்ணீர் மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றோம்.!

மனம் ஆறாத் துயரோடும் உங்கள் நினைவோடும்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வழிபட்டு நிற்கும்
மனைவி தேவராணி, பிள்ளைகள் திசான் மற்றும் தீபன்,
மருமகள் மற்றும் உற்றார், உறவினர்கள்.

எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயில் கொண்ட எங்கள் குடும்பத் தலைவரும், அப்பாவுமான Beauty International, Star Lighting, Home Decor உரிமையாளரான வைத்திலிங்கம் திவ்வியானந்தன் அவர்களின் மறைவுச் செய்தியைக் கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வந்து எங்களுக்கு அனுதாபங்களைத் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், தம் அனுதாபச்செய்திகளை தொலைபேசி மூலம் தெரிவித்த அனைவருக்கும், மலர்வளையங்கள் வைத்து அஞ்சலி செலுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், வேண்டிய உதவிகளை வேண்டியவாறு செய்து அன்னாரின் இறுதிக்கிரியையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளிலும் கலந்து கொண்டு எமக்கு எல்லா விதத்திலும் ஆறுதல்கள் அளித்த சகோதரங்களுக்கும் குடும்பத்தினருக்கும் மற்றும் இறுதிக்கிரியையில் கலந்து கொண்ட அனைவருக்கும், இறுதிக்கிரியை ஒழுங்குபட நடாத்திய விலோசன் சிவதர்மனுக்கும், ஆத்மா சாந்திக்காக இறவனை வேண்டிய அனைவருக்கும் எங்கள் உள்ளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— மனைவி, பிள்ளைகள், சகோதரர்(சச்சிதானந்தன் வைத்தி)

பிற அறிவித்தல்கள்

  1. 18 அக்டோபர், 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.