மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை மகேசவேலு
MA Dip.in Ed(Cey).SLEAS II, முன்னாள் மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர், கோட்டக்கல்வி அதிகாரி- யாழ்ப்பாணம், ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப்பணிப்பாளர்
வயது 8628 பிப்ரவரி, 1933 – 16 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- Polikandy
- வாழ்ந்த இடம்
- மானிப்பாய், கனடா, மலேசியா, பிரித்தானியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பொலிகண்டியைப் பிறப்பிடமாகவும், மலேசியா, மானிப்பாய், கனடா, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை மகேசவேலு அவர்கள் 16-08-2019 வெள்ளிக்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சற்குணம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஸ்ரீமுருகவசந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கலைரஞ்சன்(பிரித்தானியா), முகுந்தன்(கனடா), தர்ஷினி(பிரித்தானியா), ஹேமலதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மாவதி(ஐக்கிய அமெரிக்கா), ரஞ்சிதமலர்(பிரித்தானியா), பிரபாஜினி(கனடா), அகிலன்(பிரித்தானியா), சசிதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அவிக்னா, அஷ்வின், கீர்த்திகா, ஹரிப்பிரியா, அக்ஷினி, அபினன், விஷாகன் மற்றும் அபினவ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பொலிகண்டியில் புகழ் பூத்த சீமான் திரு.வேலுப்பிள்ளை அவர்தம் பாரியார் தெய்வானைப்பிள்ளை அவர்களின் அருமைப் புத்திரனாக 28/FEB/1933 ஆம் ஆண்டில் திரு.மகேசவேலு அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் சகோதரங்களுடன் சேர்ந்து நன்கு படித்து ஆசிரியர் ஆன இவர் திரு.திருமதி தம்பிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான சற்குணம் அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக ஸ்ரீமுருகவசந்தன், கலைரஞ்சன், முகுந்தன், தர்ஷினி, ஹேமலதா போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து பத்மாவதி, ரஞ்சிதமலர், பிரபாஜினி, அகிலன், சசிதரன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து அவிக்னா, அஷ்வின், கீர்த்திகா, ஹரிப்பிரியா, அக்ஷினி, அபினன், விஷாகன் ,அபினவ் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நன்கு படித்த இவர் M.A Dip.in.Ed(cey),SLEAS 2 , முடித்ததுடன்,மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபராகவும்,யாழ்-கோட்டக்கல்வி அதிகாரியாகவும்,பிரதிக்கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 16.08.2019 இல் 86 வயதில் கனடாவில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
வாச மல்லிகையே வாசங்களற்ற எங்கள்
வாழ்வில் வசந்தம் வீசி
உமை உருக்கி எமை உயர்த்தினீரே
உந்தன் கனவே எந்தன் கடமையாய்
ஏங்கித் துடிக்கும் எங்கள் மனம்
பாங்குடன் பாசத்தை தேடியே அலைகிறோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

