ஆறுதல்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

விஜயலெட்சுமி நடேஸ்வரன்

வயது 6119 டிசம்பர், 1953 – 26 பிப்ரவரி, 2015

பிறந்த இடம்
புங்குடுதீவு 3ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த விஜயலெட்சுமி நடேஸ்வரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

தேவியே.....
என்னுயிர்த் தேவியே....
என்னுள் குடிகொண்ட என்னவளே....
நீ எங்கே சென்றாய்?

தேனாய் பழகி,
தெள்ளமுதாய்ப் பேசி,
தென்றலாய் வீசிய
சுப இலட்சுமியே..
என் இதய வாணியே- நீ
என்னை விட்டு எங்கு சென்றாய்?

வீடு அழுகிறது!
வெளிச்சமோ தேடுகிறது!
விளக்கு கேட்கிறது- அம்மா
நீ எங்கே என்று?
தூரமாய்ச் சென்று விட்டாலும்
ஓரமாய் ஒருமுறை ஒளியேற்றிடம்மா..

துடுப்பு இல்லாத படகு போல
சிறகு இல்லாத பறவை போல
திசையறியாது தவிக்கின்றோம்
துடிக்கின்றோம்- வந்துவிடம்மா....

எங்களுள் வாழும் அன்புத் தெய்வமே!
ஐந்தாண்டுகளென்ன?
ஐநூறு ஆண்டுகளானாலும்
ஆறிடுமா? எங்கள் ஆறாத்துயர்
இறுதி மூச்சுள்ளவரை நினைவுறுத்தி
உங்கள் ஆத்மா நற்பேறடைய
பேச்சியம்மனிடம் இறைஞ்சுகிறோம்

என்றும் உங்கள் நினைவுகள் சுமந்து
கணவர், பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்.....

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. ஆண்டு நினைவஞ்சலி · 13 பிப்ரவரி, 20194ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 18 பிப்ரவரி, 20216ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.