நன்றி நவிலல்

விஸ்வலிங்கம் நாராயணசாமி
வயது 81
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- மல்லாவி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களிற்கும், பல நாடுகளில் இருந்தும் நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியாக, பழமை வாய்ந்த கந்தசாமி கோவில் அருள்பாலிக்கும் மாவிட்டபுரம் வீமன்காமத்தில் 21/MAY/1938 ஆம் ஆண்டில் திரு.திருமதி விஸ்வலிங்கம் கற்பகம் தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நாராயணசாமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பரமேஸ்வரி, ஐயாத்துரை, சரஸ்வதி மற்றும் துரை விசாகப்பெருமாள், தேவி போன்ற சகோதரர்களுடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி சீவரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான செல்வநாயகி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக மகேஸ்வரி, ஜெகதீஸ்வரன், உருத்திரேஸ்வரா எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரூபினி, பிரமிளா என்பவரை திருமணம் முடித்து வைத்து ஜெனகீர்த்தன், அபிவர்மன், லக்ஷா, அகிலினி, ஜவீன், ஜதிரி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் போரினால் இடம்பெயர்ந்து மல்லாவியில் வாழ்ந்ததுடன் பலருக்கு அறிவுரை கூறி உந்தித் தள்ளி உயர்வடைய வைத்த இவர் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.10.2019 இல் 81 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
குதிரை முகம் நீங்கிய ஊரில்
கதிரவனாய் உதிர்த்தீரே
எதிர் மனம் கொண்டு எல்லோரையும் காத்து
பதி ஆனீரே பாச உள்ளமே
வதிவிடம் விட்டு விதி வழி போய்
கதியற்றோர்க்கு உதவி
மதியானீர் அனைவர் மனங்களிலும்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

