ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு21 மே, 1938
இறப்பு18 அக்டோபர், 2019
விஸ்வலிங்கம் நாராயணசாமி அவர்களின் படம்

விஸ்வலிங்கம் நாராயணசாமி

வயது 81

பிறந்த இடம்
மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்
மல்லாவி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாவிட்டபுரம் வீமன் காமத்தைப் பிறப்பிடமாகவும், மாவிட்டபுரம், மல்லாவி 4ம் யூனிட் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட விஸ்வலிங்கம் நாராயணசாமி அவர்கள் 18-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீவரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, ஐயாத்துரை, சரஸ்வதி மற்றும் துரை விசாகப்பெருமாள், தேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரி(கனடா), ஜெகதீஸ்வரன்(ஜெகன் - கனடா), உருத்திரேஸ்வரா(சுதன் - கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரூபினி, பிரமிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜெனகீர்த்தன், அபிவர்மன், லக்‌ஷா, அகிலினி, ஜவீன், ஜதிரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியாக, பழமை வாய்ந்த கந்தசாமி கோவில் அருள்பாலிக்கும் மாவிட்டபுரம் வீமன்காமத்தில் 21/MAY/1938 ஆம் ஆண்டில் திரு.திருமதி விஸ்வலிங்கம் கற்பகம் தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.நாராயணசாமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் பரமேஸ்வரி, ஐயாத்துரை, சரஸ்வதி மற்றும் துரை விசாகப்பெருமாள், தேவி போன்ற சகோதரர்களுடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி சீவரட்ணம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான செல்வநாயகி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக மகேஸ்வரி, ஜெகதீஸ்வரன், உருத்திரேஸ்வரா எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ரூபினி, பிரமிளா என்பவரை திருமணம் முடித்து வைத்து ஜெனகீர்த்தன், அபிவர்மன், லக்ஷா, அகிலினி, ஜவீன், ஜதிரி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் போரினால் இடம்பெயர்ந்து மல்லாவியில் வாழ்ந்ததுடன் பலருக்கு அறிவுரை கூறி உந்தித் தள்ளி உயர்வடைய வைத்த இவர் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 18.10.2019 இல் 81 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

குதிரை முகம் நீங்கிய ஊரில்
கதிரவனாய் உதிர்த்தீரே
எதிர் மனம் கொண்டு எல்லோரையும் காத்து
பதி ஆனீரே பாச உள்ளமே
வதிவிடம் விட்டு விதி வழி போய்
கதியற்றோர்க்கு உதவி
மதியானீர் அனைவர் மனங்களிலும்

பிற அறிவித்தல்கள்

  1. 17 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.