நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
புவிராஜரட்ணம் விவேகானந்தன்
இளைப்பாறிய இலங்கை வங்கி முகாமையாளர்
வயது 702 ஆகஸ்ட், 1948 – 9 மே, 2019
- பிறந்த இடம்
- உடுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- புத்தூர், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமைப் பிரிந்த இனிய பாசப்பிறப்பே
நாடுகள் தாண்டி வாழ்ந்தாலும்- உன்
ஞாபகங்கள் எம்மை நாடுகிறதே
தொப்புள் கொடி உறவாய்
புவி பரம்பரையில்
மூன்றாவதாய் உதித்த முத்தாய்
எம் நலன் நாடும் இனிய பாசப் பிணைப்பாய்
விளங்கினாயே அண்ணா
காலனவன் செய்த கொடுமைதான்
எம்மை விட்டு நீ பிரிந்து சென்று
31 நாட்கள் கடந்தனவே
காலம் பல கடந்தாலும்
உன் பிரிவின் காயத்தின் வடு என்றும் ஆறாதய்யா
நின் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— அன்புச் சகோதரங்கள்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் உடுப்பிட்டி பொன்னாவில்லாவில் 02/Aug/1948 இல் சேதுகாவலர் புவிராஜரட்ணம் சரஸ்வதி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக விவேகானந்தன் அவர்கள் யோகேஸ்வரி, திருஞானசம்பந்தர், கதிர்காமநாதன், யோகானந்தன், குமார், பரமேஸ்வரி, நந்தகுமார், மோகனராஜ் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், துரைராஜா மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் ராஜராஜேஸ்வரி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து பார்த்திபன், துஷாரா, சாருஜா ஆகிய பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், பகீரதி ,உமாகுமாரன் என்பவர்களை திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் சாய்சரண், பிரதீஷ், மித்திரன், கிருஷ்ணவி, கனிஷ்கா, யஷ்னிகா போன்ற பேரப்பிள்ளைகளோடு மகிழ்வுற்று வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் நன்கு படித்து இலங்கை வங்கி முகாமையாளராக கடமை ஆற்றியதுன் ஓய்வு நிலை அடைந்ததுடன் இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 09.05.2019 இல் 70 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"உடுப்பிட்டி தந்த
....உத்தம உறவே
உழைத்து வாழ்ந்த
......எங்கள் உயிரே
அன்பு உறவே
....பரிவு உள்ளமே
அகிலம் துறந்தீர்
.... பண்பு உறவே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

