ஆறுதல்

நன்றி நவிலல்

யமுனா புண்ணியசீலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

யமுனா புண்ணியசீலன்

ஓய்வுபெற்ற ஆசிரியை

வயது 635 அக்டோபர், 1955 – 31 மே, 2019

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
Chennai

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் நேரடியாக வந்து கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும்,படித்த மக்களை கொண்டதும், மக்கள் செறிந்து வாழும் பகுதியும், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த அளவெட்டியில் 05/Oct/1955 ஆம் ஆண்டில் அதிபர் வேலாயுதர் கனகநாயகம், ஆசிரியை நாகபூசணி தம்பதிகளின் அன்பு மகளாக யமுனா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் அறிவும் நிறைந்த இவர் ஜெயந்தா, கயேந்திரா, குகேந்திரா, மகேந்திரா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும்,அறிவு நிறைந்த ஆண் மகனான யாழ்/யூனியன் கல்லூரி அதிபரான சுப்பிரமணியம் புண்ணியசீலன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து கேதார்ணி, நர்த்தனி போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் ஆத்மன் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இலங்கையில் ஆசிரியர் சேவை செய்ததுடன் ஓய்வு நிலையும் அடைந்தார். இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளை என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 31.05.2019 இல் 63 வயதில் இந்தியாவில் உள்ள சென்னை நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அளவெட்டி மண்ணின்
.......அறிவுக் கடலே
அன்பின் மொழியே
.......அற்புத பிறவியே
ஆயிரம் உறவுகளில்
....... முதல்நிலை உயிர்
ஆண்டவன் அடியில்
.........சரன் புகுந்தீரே"

பிற அறிவித்தல்கள்

  1. 31 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.