மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
யோகேஸ்வரன் மாலினி
வயது 4320 மே, 1972 – 25 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- கோவில் புதுக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா கோவில் புதுக்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரன் மாலினி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சச்சிதானந்தன், யசோதராதேவி தம்பதிகளின் அன்பு மகளும், கிருஸ்ணசாமி அன்னபூரணம் தம்பதிகளின் அருமை மருமகளும்,
யோகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,
தனிஸ்காந், சுஜிகாந், யுயேகாந் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவதனன்(சுவிஸ்), மோகனராஜன்(கனடா), காலஞ்சென்ற பாஸ்கரன், பாமினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சத்தியேஸ்வரன், தர்மதேவி, தவமணிதேவி, தயாழினி(இலங்கை), செல்வகீதா(சுவிஸ்), பத்மராணி(கனடா), ஸ்ரீதரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாமா, சரவணபவான், கண்ணன், ராதாகிருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகலியும்,
நடராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற மகேஸ்வரன், இராஜலெட்சுமி, சாரதாதேவி(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகளும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2015 திங்கட்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் வவுனியாவில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

