Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Apinan Shanmuganathan

In loving memory of

Apinan Shanmuganathan

Age 13September 13, 2002 – August 6, 2016

Born in
Canada
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கனடாவைப் பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த அபினன் சண்முகநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பா, அம்மாவின் ஆசைச் செல்ல மகனாய்
அக்காவின் பாசமிகு தம்பியாய்
தங்கையின் அன்பு அண்ணாவாய் - எம்முடன்
ஓர் பொக்கிசமாய் வாழ்ந்திருந்தாய்

தென்றல் வீசும் தெருவில், சிங்காரத் தேர் போல்
சித்திரமாய் சென்று வந்த உன் பாதையும்
திசை மாறிச் சென்று ஓராண்டு ஆனதையா!
எம் ஈரவிழிகள் இன்னும் காயவில்லை!

என் உணர்வாய் என் உயிராய்
எனக்குள் உருவாகிய உன்னைச்
சுமந்தேன் என் வயிற்றில் அன்று
சுமக்கிறேன் என் நெஞ்சில் இன்று சுகமான சுமையாக

முழு நிலவாய் ஒளி கொடுத்த
எங்கள் வான் நிலவே நீ எங்கே?
சிட்டாக சிறகடித்து வலம் வந்த
எம் கண்மணியே நீ எங்கே?

கண் வைத்தானோ - அந்த
இரக்கமற்ற கொடிய காலனவன்
விளையாடி ஆசை காட்டி - நீ
மறைந்து சென்ற மாயம் என்ன?

ஆண்டு ஓராண்டென்ன? ஆயிரம் தான்
போனாலும் ஆறுமோ எங்கள் மனம்?
உள்ளம் உறங்கவில்லை - உயிரோடு
நடைப் பிணங்களாக வாழ்கின்றோம்!

சிரித்த உன் அழகு வதனமும்
பேசிய உன் செல்லக் கதைகளும்
உறைந்து நிற்கிறது எங்கள் உள்ளங்களில்
அழியாத ஓவியமாக

நீ தான் எங்கள் அழியாச் சொத்து
என்று எண்ணி இருக்கையில் - உன்
நினைவுகளை மட்டுமே சொத்தாக விட்டு
காலனுடன் கைகோர்த்துச் சென்றதேனோ!

நீ இல்லாத எம் வாழ்வை எண்ணி
பேதலித்து பரிதவித்து நிற்கின்றோம்
உன்னைப் பறி கொடுத்து
பித்துப் பிடித்து நிற்பதை யார் அறிவார்?

மனம் பொறுக்குதில்லையே அபிக் குட்டி!
நீ இல்லா நம் வீடு வீடாகவே இல்லை
நீ பாவித்த பொருட்கள் எல்லாம்- உன்
வாசம் வீசி எம்மை வதைக்குதையா!

நீ கொஞ்சிப் பேசியதும், சிரித்து விளையாடியதும்
நினைவுகளில் இறங்கி நெஞ்சைப் பிசைகிறதே- எம்
ஈரவிழிகள் உன்னைத் தேடுகிறதே- உன்
சிரித்த முகத்தைத் தேடுகிறதே - காணவில்லையே... உன்னை

நீ இல்லா வெறுமை உலகத்தில்
உன் நினைவுகளுடன் எம் பயணம்
நாளும் தொடர்கின்றது
உன் வரவை எதிர் பார்த்து

உன் நினைவுகளையும் எங்கள் துயரங்களையும்
கண்ணீரால் மாலையாக்கி உனக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

பிரிவால் துயருறும் அப்பா- சண்முகநாதன்(செல்வன்- வசாவிளான்),
அம்மா- சத்தியபாமா(பாமா- புத்தூர்), அக்கா- கஜானி, தங்கை- பிரணவி.

— குடும்பத்தினர்

Other notices

  1. Obituary · August 6, 2016மரண அறிவித்தல்Read notice →
  2. 31st day · September 10, 201631ம் நாள் நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.