1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Kandiah Balasubramaniam
Age 88February 4, 1927 – December 28, 2015
- Born in
- Pungudutivu
- Lived in
- Vavuniya, Zuerich
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு குறிகட்டுவான் 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Swiss Zurich Dielsdorf ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வையகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த எங்கள் ஐயா!
நீங்கள் இறைவனடி சேர்ந்து ஓராண்டு கடந்து
விட்டாலும் நீங்கள் எப்போதும் எம்முடன் நிற்கின்றீர்கள்.
அன்புத் தெய்வமே
ஐயா ஐயா என்று உங்கள் ஆசை மகள்
கதறுவது கேட்க வில்லையா
ஐயா என் மகன் கேட்கின்றான் அம்மா
தாத்தா இனி மேல் வரமாட்டாரா நான்
என்ன பதில் சொல்வேன் என் தந்தையே!!
என் அம்மாவை விட்டு ஒரு நொடி
இருக்க முடியாத நீங்கள் இப்போது
எப்படி விண்ணுலகம் சென்றீர்கள்
என் அம்மா தினம் தினம் அழுவதை
என்னால் பார்க்க முடியவில்லையே என் தந்தையே!!
என் செய்வேன் தந்தைபோல் அண்ணன்கள்
இருந்தும் என் தந்தை போல் வருமா?
ஐயா எங்களை கண் இமை காப்பது போல்
இரவு பகலுமாய் உழைத்து உங்கள்
பெயர் சொல்ல எங்களை வளர்த்த எங்கள் தந்தையே!!
உங்கள் பிள்ளைகளும் எங்கள் அம்மாவும்
அழுவது கேட்கவில்லையே
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள்
உங்கள் ஆன்மாவின் சாந்திக்கு
எல்லாம் வல்ல மனோண்மணி அம்பாளை வேண்டுகின்றோம்
உங்கள் பிரிவால் தவிக்கும்
மனைவி, மகன்கள், மகள்,
மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— சபினாஷ்(பேரன்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

