31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Karthikesu Kulasinganaathan
Age 72November 17, 1937 – February 12, 2010
- Born in
- Mandaitivu 6th Ward
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குலசிங்கநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
தந்தை எனும் இலக்கணத்திற்கு இணங்க
வாழ்ந்து காட்டிய எங்கள் பப்பா
எத்துணை இடர்கள் துன்பங்கள் வந்தபொழுதும்
எங்களை பார் போற்றும் ஒழுக்க சீலர்களாக வளர்த்து
இவ்வையத்துள் முந்தி இருக்க செய்த எங்கள் பப்பாவே
நீங்கள் அனைவருடைய ஆன்மாவிலும் கலந்து
என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக
வாழ்வீர்கள் எங்கள் இனிய பப்பா
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - திருக்குறள்
எங்கள் குலவிளக்கின் ஆன்மா சாந்திக்காக எல்லாம்வல்ல மண்டைதீவு திருவெண்காட்சி சித்திவிநாயகனை பணிகின்றோம்.
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி....!
எமது தந்தையின் இழப்பினால் நாம் ஆற்றா துயரில் இருந்தபொழுது எங்களுக்கு நேரிடையாகவும், தொலைபேசி ஊடாகவும், மின்னஞ்சல் வழியாகவும் ஆறுதல் சொல்லி எங்கள் துயரில் இணைந்து ஆதரவாக இருந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

