31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
கார்த்திகேசு குலசிங்கநாதன்
வயது 7217 நவம்பர், 1937 – 12 பிப்ரவரி, 2010
- பிறந்த இடம்
- மண்டைதீவு 6 ஆம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு குலசிங்கநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
தந்தை எனும் இலக்கணத்திற்கு இணங்க
வாழ்ந்து காட்டிய எங்கள் பப்பா
எத்துணை இடர்கள் துன்பங்கள் வந்தபொழுதும்
எங்களை பார் போற்றும் ஒழுக்க சீலர்களாக வளர்த்து
இவ்வையத்துள் முந்தி இருக்க செய்த எங்கள் பப்பாவே
நீங்கள் அனைவருடைய ஆன்மாவிலும் கலந்து
என்றும் எங்களுக்கு வழிகாட்டியாக
வாழ்வீர்கள் எங்கள் இனிய பப்பா
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல் - திருக்குறள்
எங்கள் குலவிளக்கின் ஆன்மா சாந்திக்காக எல்லாம்வல்ல மண்டைதீவு திருவெண்காட்சி சித்திவிநாயகனை பணிகின்றோம்.
ஓம் சாந்தி...! ஓம் சாந்தி...! ஓம் சாந்தி....!
எமது தந்தையின் இழப்பினால் நாம் ஆற்றா துயரில் இருந்தபொழுது எங்களுக்கு நேரிடையாகவும், தொலைபேசி ஊடாகவும், மின்னஞ்சல் வழியாகவும் ஆறுதல் சொல்லி எங்கள் துயரில் இணைந்து ஆதரவாக இருந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

