நினைவஞ்சலி

In loving memory of
Mailvaganam Thankakuddy
Age 81March 5, 1934 – January 1, 2016
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமயில்வாகனம் தங்கக்குட்டி:
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம் புங்கை நகரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகனம் தங்கக்குட்டி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் பேர் அன்பாக இருந்தாலும்
உன் அன்பிற்கு இணை எவருண்டு தாயே
தேய் பிறை காணாத முழுமதி
போன்ற உன்முகத்தை
இனி எப்படி காண்போமோ தாயே
எங்களுக்கு துன்பம் நேரும் போது
எங்கள் கண்கள் கலங்கும் முன்னே
உன் கண்கள் கலங்கியதே அம்மா
அன்று ஆறுதல் சொல்ல நீ இருந்ததால் என்னவோ
கவலையும் காற்றாய் பறந்தது அம்மா
கண்ணும் இமையுமாய் பத்து திங்கள்
எங்களை காத்தாயே இடையில்
விடை பெற்று பிரிந்து சென்றது ஏனோ
எங்கள் சுவாசத்திற்கும் இதயதுடிப்பிற்கும்
விடுமுறை கிடைத்தாலும் தாயே
உன் மீது உள்ள எங்கள் அன்பிற்கு
விடுமுறை இல்லையம்மா
என்றும் உங்கள் மறவா நினைவுகளுடன்.
சின்னத்தம்பி மயில்வாகனம்:
யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்தம்பி மயில்வாகனம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.
உறங்கும் விழிகளுக்குள் உறங்காத
விழிகளாய் உன் நினைவுகள் அப்பா
கைகளால் உணவுண்ணும் வரை உன்
கைப்பக்குவம் உணர்ந்தோம் அப்பா
உன் தாலாட்டில் உறங்கிடும் போது
கனவுகளில் மிதந்தோம்
உன் விரல்கள் காட்டிய பாதையில்
பல வெற்றிகள் கடந்தோம்
எங்களை அறிந்த போது
உனக்காக வாழ நினைத்தோம்
ஆலமரம் சரிந்து விழுதுகள்
வளரும் முன்னே பெற்றவளின் கண்ணில்
கண்ணீர் ததும்ப எங்களின் எதிர்காலம்
கேள்வி குறியாக ......
நடப்பது பொய்யா மெய்யா
என்னும் மயக்கத்தில் நாங்கள்
இடையில் எங்கு சென்று வீட்டீர் அப்பா
நீர் மட்டும் தனியாக
மீண்டும் ஒரு ஜென்மத்தில்
உங்களின் பிள்ளைகளாய்
பிறக்க காத்திருக்கின்றோம்....
உங்கள் நினைவுகளோடு
பிள்ளைகள், மருமக்கள், தம்பி,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

