1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mailvaganam Thankakuddy
Age 81March 5, 1934 – January 1, 2016
- Born in
- Pungudutivu 2nd Ward
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்டிருந்த மயில்வாகானம் தங்கக்குட்டி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் தங்கம்மாவுக்கு சமர்ப்பணம்
அம்மா! ஆண்டொன்று வந்ததென்ன உன் நினைவு நாளாக
தாயே தந்தையில்லா குறையை தராமல்
உன் பிஞ்சுகளை கனிவோடு கனியாக்கினாயே
நீ பசியிருந்து எங்கள் பசி தீர்த்தாயே
உன் இமை மூடாமல் காத்தாயே...
கருவறையில் காத்த உன்னை தீயறையில் சேர்க்க நேர்ந்ததே
நீ மறைந்து தெய்வம் ஆனாய்
நாங்கள் தாய் அன்பு இல்லாமல் பரிதவிக்கின்றோம் அம்மா
உன் அன்புபோல் வருமோ அம்மா...
சட்டென வந்த காலன் சடுதியாய் உன் உயிரை
ஏன் தானோ எடுத்து சென்றான்
அம்மா நீ மறைந்து ஓராண்டு போனதென்ன
உன்னை நினைத்து எங்கள் நெஞ்சம் துடிப்பதென்ன
ஓராண்டென்ன ஆண்டுகள் ஆயிரமாகட்டும் மறப்போமா உன்னை!
உன் அன்பு முகத்தை அம்மா ...
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் தவிக்கும்
பிள்ளைகள், மருமக்கள், சகோதரன், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

