1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Mariyadas Mary Margaret
Age 70July 7, 1945 – December 7, 2015
- Born in
- Mullaitivu
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியதாஸ் மேரி மாக்கிரட் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னையாக அவதரித்து ஆறுதல் தந்து அவலங்கள் தீர்த்தாய்
ஆண்டு ஒன்று ஆனதம்மா ஆறவில்லை எம்இதயம்
தேடுகின்றோம் கதறுகின்றோம் தேசமெல்லாம் உனை தேடி
தெய்வமாய் இன்று திருவதனம் பார்க்கின்றோம்
உறக்கமின்றி உழைத்த நீ அம்மா
இன்று நீள்துயில்கொள்ளும் மர்மம் என்னே
சிறியதாய், தந்தை, உற்றார் உடன்பிறப்புகள்
மக்கள், மருமக்கள்,பேரக்குஞ்சுகள்
பரிதவிக்கின்றனர் நின் நிழல் தேடி
வந்திடாயோ எம் அருகில் ஆறுதல் தந்திடவே
மலர்தூவி நிற்கின்றோம் நாளும்
தெய்வமாய் வணங்குவோம் - வாழ்வுள்ளநாள்வரை
கண்மூடி இருக்கின்றேன் அம்மா நீ
கனவில் வருவாய் என்று கவலைகள் மறக்கின்றேன்
உனைக்கண்ட நாளன்று
வார்த்தைகள் இல்லையம்மா உன் வாழ்நாளை வர்ணிக்க
வாடுகிறோம் வருந்துகிறோம் நல்வழி காட்டிடுவாய்
நின் நிழல்கள் எம்மிற்கு
மண்டியிட்டு வேண்டுகிறோம் மாதாவை மணியே
நின் ஆத்மா சாந்தியடைய!!!
ஆமேன்! ஆமேன்! ஆமேன்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

