31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Mariyadas Mary Margaret
Age 70July 7, 1945 – December 7, 2015
- Born in
- Mullaitivu
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியதாஸ் மேரி மாக்கிரட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
முல்லை மண்ணில் உதித்த மணியே
மன்மதனாம் மரியதாஸ் கைபிடித்து
வீரமகன் ஓரொன்றையும்
பாசமகள்கள் மூன்றையும் ஈன்றெடுத்து
ஈகையெனும் நற்பண்பை
ஞாலம் முழுதும் பரப்பிவிட்ட இதயமகள்
நீ இன்று மீளாது தூங்குகின்றாய்
நாம் இங்கு புலம்புகிறோம்!
கதறுகிறோம் நின் புன்னகை வதனம் தேடி
பசுமரமாய் நின்றெமக்கு நிழல் தந்த ஈகைத்தாயே
நீண்ட தூரம் சென்றாயோ?
வாடுகின்றோம் தேடுகின்றோம் உன் நிழல் தேடி!
ஊன் உருக்கி உடல் வருத்தி உழைத்த உத்தமியே
நீள் துயில் கொள்ளும் நியாயம் தான் என்னே?
தாய் இழந்த சேய்கள் நாம் வலுவிழந்து
துடிக்கின்றோம் அன்னை உன்னைத் தேடி!
பூமித் தாயுடன் அன்னியமானதோ
மணியே உன் பூவுடம்பு
தங்க மக்கள் நால்வரையும் கைபிடித்த மருமக்கள்
ஏங்கி இங்கு நிற்கின்றோம் மாமி என்று நாம் அழைத்தும்
தாயாக பரிவு காட்டி பண்புதனை பொழிந்த பாசத்தாயே!
நீ இங்கு இன்று இல்லை
பாவி மருமக்கள் புலம்புகின்றோம்
அமைதித் துயில் கொன்றிடுவாய்
ஆண்டவரை வேண்டுகின்றோம்
பாலகன் உதித்திட்ட வேளையில் பாருலகம் விட்டு
நீண்ட தூரம் சென்றனையோ
உன் உருவம் தேடி கதறுகின்றோம்!
கேளாயோ ஒரு கணம் எம் அழு ஓசை
நின் பேரக்குஞ்சுகள் புலம்புகின்றோம்
அம்மம்மா அப்பம்மா என்று
அழைக்க யாருண்டு இனியெமக்கு!
அம்மாவாய் எமக்கிருந்து அறிவுரைகள் கூறி
அன்புடனே சோறூட்டி ஆளாக்கி விட்ட மாதா
இன்று தெய்வமாய் உயர்ந்து நின்று
எமக்கு ஆசி வழங்குகின்றாய்
உன் ஆத்மா சாந்தி அடைய மாதாவிடம் மன்றாடுகிறோம்!
ஆறாத்துயரில் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
— பீற்றர் பிரதீபன்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

