ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

மரியதாஸ் மேரி மாக்கிரட் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

மரியதாஸ் மேரி மாக்கிரட்

வயது 707 ஜூலை, 1945 – 7 டிசம்பர், 2015

பிறந்த இடம்
முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த மரியதாஸ் மேரி மாக்கிரட் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

முல்லை மண்ணில் உதித்த மணியே
மன்மதனாம் மரியதாஸ் கைபிடித்து
வீரமகன் ஓரொன்றையும்
பாசமகள்கள் மூன்றையும் ஈன்றெடுத்து

ஈகையெனும் நற்பண்பை
ஞாலம் முழுதும் பரப்பிவிட்ட இதயமகள்
நீ இன்று மீளாது தூங்குகின்றாய்
நாம் இங்கு புலம்புகிறோம்!
கதறுகிறோம் நின் புன்னகை வதனம் தேடி

பசுமரமாய் நின்றெமக்கு நிழல் தந்த ஈகைத்தாயே
நீண்ட தூரம் சென்றாயோ?
வாடுகின்றோம் தேடுகின்றோம் உன் நிழல் தேடி!

ஊன் உருக்கி உடல் வருத்தி உழைத்த உத்தமியே
நீள் துயில் கொள்ளும் நியாயம் தான் என்னே?
தாய் இழந்த சேய்கள் நாம் வலுவிழந்து
துடிக்கின்றோம் அன்னை உன்னைத் தேடி!
பூமித் தாயுடன் அன்னியமானதோ
மணியே உன் பூவுடம்பு

தங்க மக்கள் நால்வரையும் கைபிடித்த மருமக்கள்
ஏங்கி இங்கு நிற்கின்றோம் மாமி என்று நாம் அழைத்தும்
தாயாக பரிவு காட்டி பண்புதனை பொழிந்த பாசத்தாயே!

நீ இங்கு இன்று இல்லை
பாவி மருமக்கள் புலம்புகின்றோம்
அமைதித் துயில் கொன்றிடுவாய்
ஆண்டவரை வேண்டுகின்றோம்

பாலகன் உதித்திட்ட வேளையில் பாருலகம் விட்டு
நீண்ட தூரம் சென்றனையோ
உன் உருவம் தேடி கதறுகின்றோம்!
கேளாயோ ஒரு கணம் எம் அழு ஓசை

நின் பேரக்குஞ்சுகள் புலம்புகின்றோம்
அம்மம்மா அப்பம்மா என்று
அழைக்க யாருண்டு இனியெமக்கு!

அம்மாவாய் எமக்கிருந்து அறிவுரைகள் கூறி
அன்புடனே சோறூட்டி ஆளாக்கி விட்ட மாதா
இன்று தெய்வமாய் உயர்ந்து நின்று
எமக்கு ஆசி வழங்குகின்றாய்
உன் ஆத்மா சாந்தி அடைய மாதாவிடம் மன்றாடுகிறோம்!

ஆறாத்துயரில் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

— பீற்றர் பிரதீபன்

பிற அறிவித்தல்கள்

  1. 7 டிசம்பர், 2015மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 5 டிசம்பர், 20161ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 4 டிசம்பர், 20172ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.