31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
------
Age 84November 16, 1931 – August 3, 2016
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceபொன்னம்பலம் கந்தையா:
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் கந்தையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
பரமேஸ்வரி பொன்னம்பலம்:
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி பொன்னம்பலம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து
எமைப் பெற்றெடுத்த அன்னையே!
ஆதரித்து அரவணைத்து அறிவூட்டி அகிலத்தில்
எமையெல்லாம் பெயர் துலங்க வாழவைத்த அப்பனே!
யாருக்கும் கிடைக்காத சொர்க்கம் கண்டீர் நீங்கள்...
ஒன்றாய் வாழ்ந்து...
இருவரும் இணைந்தே இவ்வுலக வாழ்வை முடித்து ஏகினீர் வானுலகம்
செய்வதறியாது திகைக்கின்றோம் நாமிங்கு
வையத்துல் வாழ்வாங்கு வாழ்ந்து நீங்கள்
வானுறையும் தெய்வத்துடனும் இணைந்து
எம்மை ஆசீர்வதிக்கவும்
தில்லைக்கூத்தன் திருவடியில் உங்கள்
இருவரின் ஆத்மா நித்திய சுகம் காணவும்
காலமெல்லாம் பிரார்த்திக்கின்றோம் நாமே!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி
என்றென்றும் உங்கள் நினைவலைகளுடன் வாழும்
பிள்ளைகள், மருமக்கள், சகோதரர்கள்,
பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
அன்னாரின் மரணச் செய்தி கேட்டவுடன் பொங்கும் அன்பால் அருகிருந்து போற்றலுரு பணி செய்தோர், தொலை தூரமிருந்து வந்தோர், தொலைபேசி அனுதாபம் செய்தோர், கண்ணீர் அஞ்சலிகளால் துயர் பகிர்ந்தோர், மலர்மாலைகள் செலுத்தியோர், தோழமைக்கு தோள் கொடுத்த நண்பர்கள், உற்றார், உறவினர்கள், ஊரவர், சபிண்பீகரண அந்தியேட்டி கிரியைகளை சிறப்புற ஆற்றிவைத்த குருமார்கள், மற்றும் பல வழிகளில் உதவி புரிந்து இறுதிக்கிரியையில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
119/4, முன்வீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

