நினைவஞ்சலி

In loving memory of
------
Age 84November 16, 1931 – August 3, 2016
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Thirunelveli
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகந்தையா பொன்னம்பலம் :
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 11ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த கந்தையா பொன்னம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்னம்பலம் பரமேஸ்வரி :
யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பலாலி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் பரமேஸ்வரி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
பொன்னம்பலம் எனும் பெயர் பூண்டவன்
எமது அன்புத் தந்தை சமாதான நீதவான் -இந்த
மண்ணம்பலம் எங்கும் அன்பால் ஆண்டவன்
எண்ணம் போல் நல்ல எழில் வாழ்வு கண்டவன்
முன்னம் அவனைக் கைத்தலம் பற்றித் தன்
வண்ணக் கனவுகள் நனவாக உலகெங்கும்
திண்ணமுடன் திரிசேர் விளக்கும் போல்
அண்ணலுடன் ஒரு சேர ஒளிர்ந்து பொன்
வண்ணத் தாரகை போல் புவியெலாம் வலம் வந்த
எமது ஆருயிர் அன்னை பரமேஸ்வரி
கண்ணவனாம் இன்னுயிர்க் கணவனோடு ஒன்றாய்
விண்ணகம் ஏகிய ஓர் ஆண்டு நினைவு நாள்
பொன்னம்பலமும் பரமேஸ்வரியும் செதுக்கிய
கைவண்ணத்தின் சிற்பங்களாம் எழுவரும்
எழுபிறப்பும் பழிபிறங்காப் பண்புடை மக்களுள்
மாணிக்கங்களை இம்மண்ணிடை ஒளிர விட்டு
விண்ணகம் தேடி விரிசிறகடித்த ஓர் ஆண்டு
நினைவேந்தலில் கண்கள் நீருண்ட மேகமாய் பொழிகின்றன
சீராண்ட பெரும் பேறுகளே! ஓராண்டென்ன ஓராயிரம்
ஆண்டுகள் ஆயினும் உமை மறவோம்
பாசமுடன் பெற்றெடுத்துப் பக்குவமாய் ஆளாக்கி
ஊர் புகழ உற்றார் மகிழப் பார் புகழ வாழ வைத்து
உறு பொருளுடன் உற்ற துணை தேடித் தந்து
நேசமுடன் மருமக்களோடு உறவாடி பேர் சொல்லும்
பேரன் பேர்த்திகளோடு கொஞ்சி மகிழ்ந்து
செல்ல மொழி பேசி போதும் இவ்வுலக வாழ்வென்று
தப்பாது இருவரும் ஒன்றாய் புண்ணியவுலகு புகுந்ததென்ன
இமைப்பொழுதும் எமை விட்டு நீங்காதவரே !எண்ணிடும்
போதில் நெஞ்சினில் நினைவாய் கண்களில் ஒளியாய்த்
தோன்றிடும் எம்குலத் தெய்வங்களைப் போற்றுகிறோம்
இறப்பினிலும் இணை பிரியா அன்றில்கள் போல்
புங்கையூரின் முன்றிலிலும் கடல் சூழ்ந்த மன்றிலெங்கும்
சிறகடித்து அறம் பொருள் இன்பம் என
அத்தனையும் துய்த்து ஒன்றாய் ஒரே நாளில்
வீடுபேறு எய்திய சீரிய இன்னுயிர்ப் பெற்றோரின்
ஓர் ஆண்டு நினைவேந்தல் கடலில் நீந்துகிறோம்.
*************************************
பன்னிரு திங்கள் பறந்துதான் வந்ததுவே
பாரை விட்டு சென்ற அம்மையே! அப்பா!
நான்கு சட்டத்தினுள் நாம் நின்னைப் பார்க்க
வைத்து விட்டீர்களே!
பாயில் கிடவாது பார்க்க வைக்காது
வைகுண்டம் ஏறிய வகைதான் எம்மை பேரதிர்ச்சிக்கு வைத்ததுவே,
கடுகதியாய் இருவரும் காற்றாய் பறந்தீர்கள்
பூமியிலே நாம் வாழ புகழது தந்தீர்கள்
அன்பால் எமை அணைத்து அறிவால் நிரப்பி
அகிலத்தில் நாம் வாழ துணையாய் நின்றீர்கள்
கணீர்! என்ற ஒலியில் கதைகள் பல சொல்வீர்கள்
அரைநொடியில் எமை விட்டு அவசரமாய் சென்றதேனோ!
பாதை வழி பார்த்தாலும்
பாதியிலே வரமாட்டீர் என்ற உண்மை
அறிந்தும் எம்மால் ஜீரணிக்க முடியவில்லை
நிலையில்லா உலகில் நிலையான
இடம்தேடி இணையாக சென்ற உங்கள் ஆத்மா
இறைவன் திருவடியில் நித்திய சுகம் பெற
ஆண்டவணை அனுதினமும்
வேண்டுகின்றோம் நாம் எல்லாம்
ஒம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
உங்கள் நினைவால் வாடும்
குடும்பத்தினர்
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

