1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Parameswary Koneshapillai
Age 76January 15, 1941 – February 7, 2017
- Born in
- யாழ் கரம்பொன் தெற்கு
- Lived in
- France, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள்! எம் தாய்!
தொட்டிலில் இட்ட அன்னையை
சுடுகாட்டில் சுட்டுவிட்டு
ஒட்டமுடியா உறவாகி
ஓராண்டு தாண்டியும் அழுகின்றோம்!
பாலூட்டி வளர்த்த எம் தாயே - உனை
பாலூற்றி அனுப்பி ஓராண்டாய் தவிக்கின்றோம்!
அன்னமிட்ட தெய்வமே - உனக்கு
அரிசியிட்ட பாவிகளாகி நின்று அழுகின்றோம்!
எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள் நீ
உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய சுமைதாங்கியும் நீயம்மா!
ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில் எமக்கினி யார் தருவார்?
அருமருந்தாய் இருந்து அல்லல் என்ற நோய் தீர்த்து
அன்பென்னும் பாசத்தை அமுதுடன் கலந்தளித்து
அகிலத்தில் நாம் வாழ ஆக்கமும் ஊக்கமும் தந்த
ஆற்றலே! தாயே! அன்னையே!
நம் உறவெல்லாம் கூடி ஓர் ஊராய் குழுமி நின்று
கதறி அழுதும் எம் துயரம் தீராது
காலம் ஆண்டு ஒன்று ஆனதம்மா
நெஞ்சமெல்லாம் வெந்து துடிக்கின்றோம்!
இல்லை என்ற வார்த்தை உங்கள் இதயத்தில் இல்லை
உதவி என்னும் சொல் உங்கள் உதிரத்தின் உச்ச எல்லை
உறங்கியது போதும் எழுந்து வாருங்கள்
எங்கள் கலக்கமது தீர கண்திறந்து பாருங்கள்!
அருகில் நீங்கள் இல்லை அம்மா - ஆனால்
எம் அனைவரையும் அணைத்தே இருக்கின்றீர்கள் அம்மா!
காலன் எங்கள் உறவுப்பாலத்தை அறுத்து- உயிர்மூச்சை
பறித்து ஓராண்டு ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்
ஆத்மா சாந்தியடைய அன்னையின் காலடியே
சொர்க்கம் என்ற உண்மையினை இதயத்தில் ஏற்றி
நாளும் இறைவனை வேண்டுகின்றோம்!
கணவன், மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

