ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

பரமேஸ்வரி கோணேசபிள்ளை

வயது 7615 ஜனவரி, 1941 – 7 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
கரம்பொன் தெற்கு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரம்பொன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த பரமேஸ்வரி கோணேசபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டியவள்!
உதிரமெல்லாம் பாசத்தை ஏந்தியவள்! எம் தாய்!

தொட்டிலில் இட்ட அன்னையை
சுடுகாட்டில் சுட்டுவிட்டு
ஒட்டமுடியா உறவாகி
ஓராண்டு தாண்டியும் அழுகின்றோம்!

பாலூட்டி வளர்த்த எம் தாயே - உனை
பாலூற்றி அனுப்பி ஓராண்டாய் தவிக்கின்றோம்!
அன்னமிட்ட தெய்வமே - உனக்கு
அரிசியிட்ட பாவிகளாகி நின்று அழுகின்றோம்!

எம் வாழ்க்கையின் வேராய் வாழ்ந்தவள் நீ
வாழ்க்கையில் ஒப்பிடா வேறாய் விளங்குபவள் நீ
உடலுக்குள் உயிர்வளர்த்த கடவுள் நீ
பத்துத்திங்கள் எம் சுமைதூக்கிய சுமைதாங்கியும் நீயம்மா!

ஆயிரம் ஆண்டுகள் அடுத்தடுத்து வந்தாலும்
ஆழிசூழ் உலகில் அன்னை உன் நினைவு மங்கிடுமோ?
நீ தந்த பாசத்தை இவ்வுலகில் எமக்கினி யார் தருவார்?

அருமருந்தாய் இருந்து அல்லல் என்ற நோய் தீர்த்து
அன்பென்னும் பாசத்தை அமுதுடன் கலந்தளித்து
அகிலத்தில் நாம் வாழ ஆக்கமும் ஊக்கமும் தந்த
ஆற்றலே! தாயே! அன்னையே!

நம் உறவெல்லாம் கூடி ஓர் ஊராய் குழுமி நின்று
கதறி அழுதும் எம் துயரம் தீராது
காலம் ஆண்டு ஒன்று ஆனதம்மா
நெஞ்சமெல்லாம் வெந்து துடிக்கின்றோம்!

இல்லை என்ற வார்த்தை உங்கள் இதயத்தில் இல்லை
உதவி என்னும் சொல் உங்கள் உதிரத்தின் உச்ச எல்லை
உறங்கியது போதும் எழுந்து வாருங்கள்
எங்கள் கலக்கமது தீர கண்திறந்து பாருங்கள்!

அருகில் நீங்கள் இல்லை அம்மா - ஆனால்
எம் அனைவரையும் அணைத்தே இருக்கின்றீர்கள் அம்மா!
காலன் எங்கள் உறவுப்பாலத்தை அறுத்து- உயிர்மூச்சை
பறித்து ஓராண்டு ஆனாலும் ஆறவில்லை எம் துயரம்

ஆத்மா சாந்தியடைய அன்னையின் காலடியே
சொர்க்கம் என்ற உண்மையினை இதயத்தில் ஏற்றி
நாளும் இறைவனை வேண்டுகின்றோம்!

கணவன், மக்கள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்.

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 8 பிப்ரவரி, 2017மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 31ஆம் நாள் நினைவஞ்சலி · 7 மார்ச், 201731ம் நாள் நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.