மரண அறிவித்தல்

In loving memory of
Paramu Nagamaa
Age 90February 17, 1920 – April 1, 2010
- Born in
- Chavakachcheri
- Lived in
- Chavakachcheri
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceசாவகச்சேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட பரமு நாகம்மா அவர்கள் 01.04.2010 வியாழக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற பரமுவின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற துரைசிங்கம்(தம்பு ஆசிரியர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி) அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கையிலாயபிள்ளை(ஆசிரியர் சாவகச்சேரி இந்துக் கல்லூரி), மகேஸ்வரி(மங்களம்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாக்கியலீலா(கனடா), நாகராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராகுலராணி(டென்மார்க்), குணசீலன்(கனடா), பரமராணி(இந்தியா), சாந்தசீலன்(ஜேர்மனி), பரமசீலன்(ஜேர்மனி), பரம்சிறி(அப்பன் - இத்தாலி), பூங்கல்யா, நாகுலசிறி, அரியலிங்கம்(பிரான்ஸ்), சிறிஇளங்கோ(நோர்வே), சிவகெங்கை, சிறிமலர், கணேஸ்வரன்(பிரித்தானியா) ஆகியோரின் பேத்தியும்,
சங்கவி, சேரன், சாரங்கி, கெளசல்யா, மாதுளன், குருபரன், கஜமுகன், லக்சி, சங்கீதன், தரணிகா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரி்ன் இறுதிக்கிரியைகள் 04.04.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10:00 மணியிலிருந்து பிற்பகல் 4:00 மணிவரை பொரளை ஜெயரட்ண மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

