31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Renuka Thavayogarajan
Age 35September 13, 1980 – February 9, 2016
- Born in
- Sangarathai
- Lived in
- East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் EastHam ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரேணுகா தவயோகராஜன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
பூமிக்கு ஒரு யாத்திரை வந்தாய்
யாத்திரை வந்த இடத்தில்
என்னுடன் ஐக்கியமானாய்
உயரங்கள் நாம் காண
வாழ்க்கை பயணத்தில் துணையாக இருந்தாய்
யாத்திரையை பாதி வழியில் முடித்து விட்டு
வந்த வழி திரும்பியது ஏனோ?
நாட்கள் முப்பத்தொன்று கடந்து ஓடியதே
என் ஈர விழிக் கண்ணீர் மட்டும் ஓயவில்லையே
சிரிப்புட அழகாக வாழ்ந்த உன்னை
ஈசன் இரக்கமில்லாமல் அழைத்துச் சென்றானே!
பூவுக்கு வாசம் தந்தவளே
பூவுலகை விட்டு விண்ணுலகம் விரைந்ததேனோ
உன் பாச உறவுகள் இங்கு தானே இருக்கின்றோம்
எப்படியம்மா உன்னால் எங்களை விட்டு போகமுடியும்
அம்மா நீங்கள் சென்ற கணமும்
அம்மா நீங்கள் சொன்ன வார்த்தைகளும்
அம்மா நீங்கள் செய்த உன்னதங்களும்
அம்மா நீங்கள் தந்த நெறிகளும்
எங்கள் நெஞ்சில் என்றும் அழியாதம்மா
அன்பு அம்மா நோய் வடிவில் வந்த காலன்
உங்களை கொண்டு போய் விட்டானே
அன்று மாலை வரை நீங்கள் புரிந்த அன்பு மழை
இன்னமும் எங்கள் கண்முன்னே உள்ளதம்மா
எங்கள் மனதில் எழுகின்ற கேள்விகளுக்கு
ஒவ்வொரு நாளும் விடை தேடுகின்றோம் அம்மா!
இறைவன் எங்களுக்கு கண்ணீரை பரிசாக தந்து
மெளனம் காணுகின்றார் அம்மா!
எங்கள் இதயத்துடிப்பில் அன்பு கொண்ட உங்கள் வதனம்
அருகினில் இருப்பது போல் உணருகின்றோம்
அன்பால் என்றும் எத்தனை மாதம்
எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
நீங்காது உங்கள் நினைவு எம் நெஞ்சோடு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கும்
கணவர், பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள்.
எங்கள் குடும்பத் தலைவி ரேணுகா தவயோகராஜன் அவர்கள் நோயுற்ற போது சிகிச்சை அளித்த வைத்தியர்கள், தாதிகள், அவர் அமரத்துவம் அடைந்த செய்தியை கேட்டு ஓடோடி வந்து எமக்கு ஆறுதல் கூறியும், உதவி ஒத்தாசை புரிந்தவர்களுக்கும், துயரத்தை பகிர்ந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும், மலர் வளையங்கள், பூச்செண்டுகள் சாத்திய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— கணவர், பிள்ளைகள்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

