நினைவஞ்சலி

In loving memory of
Renuka Thavayogarajan
Age 35September 13, 1980 – February 9, 2016
- Born in
- Sangarathai
- Lived in
- East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ரேணுகா தவயோகராஜன் அவர்களின் கண்னீர் அஞ்சலி.
எங்கள் மூவரையும்
பத்து மாதம் சுமந்து பெற்று, பாலூட்டி, உணவு தந்து,
அன்பு பாராட்டி, மார்பிலும், தோளிலும் தூக்கி வளர்த்து
எம்மை ஆளாக்கிய அன்புத் தாயே!
உங்களை ஒரு போதும் நாங்கள் மறக்க மாட்டோம்….
எப்படியம்மா உங்களை எங்களால் மறக்க முடியும்….
நாங்கள் உறுதியுடன் காலூன்றும் வரை
உதவியாக இருந்து நாங்கள் விழும்போது
தூக்கி எங்களை அணைத்துக் கொள்வாயே அம்மா…..
நாங்கள் அடம்பிடிக்கும் போது
ஒரு வார்த்தை கடிந்து பேசாது
அமைதியாக சமாதானப்படுத்தி
ஆலோசனை சொல்வாயே அம்மா….
நாங்கள் செய்யும் தவறு பெரிதாயினும்,
சிறிதாயினும் மன்னிக்கும் உமது இதயம்
ஒரு பொற் கோயில் அம்மா….
சிறு பிள்ளைப் பயத்தை அன்போடு போக்கி
நம்பிக்கை ஊட்டி மென்மையுடன் எங்களை
பொக்கிஷமாகப் பேணிப் பாதுகாத்தாயே அம்மா
நோயாயினும், எந்த நிலை வந்த போதும்
மாறாத உமது எதிர்பார்ப்பில்லா அன்புக்கு
ஈடாக எதைக்கூற முடியும் அம்மா!
பிறந்த நாள் தொடக்கம் இன்று வரை
நேரம் தவறாது எங்கள் கடமைகளை செய்து
பாடசாலைக்கோ ,பிற வகுப்புகளுக்கோ அல்லது
வேறு இடங்களுக்கோ எங்களின் கை பிடித்து
அழைத்துச் செல்வாயே அம்மா...
இனி நாங்கள் யாருடைய கையை
பிடித்துச் செல்வது என்று கலங்குகின்றோம்...
உங்களின் மென்மைக்கு உவமை ஏது அம்மா? …
அம்மா உங்களின் அன்பை எடை போட
இந்த உலகில் யாரால் முடியும்?…
உங்கள் இடத்தை யார் வந்தாலும்
ஒரு போதும் நிரப்ப முடியாதம்மா
அப்பாவையும் , எங்களையும்
சந்தோசமாக வைக்க உங்களை
தியாகம் செய்து எப்போதும் சிரித்த
முகத்தோடு எமக்கு சேவை செய்வாயே அம்மா...
எங்கள் மூவரையும் ஒரு சிற்பியாக இருந்து
எவ்வாறு உருவாக்க வேண்டும் என்று
நீங்கள் நினைத்தீர்களோ
அதனை நாங்கள் நிச்சயம் செய்வோம்
என்று உங்கள் முன் உறுதி கூறுகின்றோம் அம்மா…
அப்பாவின் சொற்கேட்டு நல்ல பிள்ளைகளாய்
யாவரும் போற்றும் வண்ணம் நடப்போம் அம்மா…
இனி எங்களுக்கும் அப்பாவுக்கும்
நீங்கள் தான் தெய்வம் அம்மா….
நீங்கள் எங்களையும், அப்பாவையும்
தெய்வமாக இருந்து
வழி நடத்துங்கள் அம்மா…
ஆங்கிலப் பதமான Mother என்ற சொல்லின்
ஒவ்வொரு எழுத்துக்குமான கருத்துக்கள்….
'M' is for the million things she gave me,
'O' means only that she's growing old,
'T' is for the tears she shed to save me,
'H' is for her heart of purest gold;
'E' is for her eyes, with love-light shining,
'R' means right, and right she 'll always be,
உங்கள் ஆத்மா சாந்தியடைய
நாங்களும் அப்பாவும் நமது உறவுகளும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
— ரிஷிபன், கரிஸா, கபிஸா(பிள்ளைகள்)
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

