1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Renuka Thavayogarajan
Age 35September 13, 1980 – February 9, 2016
- Born in
- Sangarathai
- Lived in
- East Ham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கரத்தையைப் பிறப்பிடமாகவும், லண்டன் East Ham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ரேணுகா தவயோகராஜன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலம் கடந்தாச்சு! கனவுகள் கலைந்தாச்சு!!
ஆண்டொன்று ஆயாச்சு - உன்
நினைவு அது நீங்கவில்லை
கணமேனும் மறவாத உன்
முகம் தன்னை தேடுகின்றோம்
பிள்ளைகளோடு என்னையும் தனியாக
தவிக்கவிட்டு பதில் ஏதும் சொல்லாமல்
பயணம் தான் சென்றனையோ !
இமை மூடி தூங்கினாலும்
விடை தேடி அழுகின்றது இதயம்
மனம் மட்டும் மௌனித்து
உன் நிலை தன்னை ஏற்கின்றது
யாரிடம் பகிர்வோம்
இந்த மனம் படும் வேதனையை
நாம் வாழ்ந்த வாழ்வை எண்ணி
தினம் தினம் வாடுகின்றோம்
உன் பிஞ்சுகளை அள்ளி கொஞ்சி
விளையாடி வளர்த்த கதை யார் அறிவார்
துள்ளி விளையாடும் வரை வளர்த்த நீங்கள்
அதை பார்க்க வழி இல்லாமல்
பாவி காலன் அழைத்து விட்டான் எம்மை விட்டு!
அழகான வீடுதனில் அரசாள ஆசை கொண்டு
மனம் போல மனை ஒன்றை மகிழ்வோடு உருவாக்கி
அதை ஆள அரசியின்றி அழுகின்றோம் எந்நாளும்
உங்களை மட்டும் ஏன் அம்மா விரைவாக
அழைத்திட்டான் எம்மை விட்டு
குறை இன்றி எம்மை ஆளாக்கிய
எம் ஈடில்லா பொக்கிஷமே
உமக்கு நிகர் யாருமில்லை
நாம் வாழும் இம் மண்ணில்
ஊர் உறங்கும் நேரத்திலும்
எங்கள் மனம் உறங்கவில்லை அம்மா !
எங்களுக்குள் நீங்கள் வாழ்வதால் தான்
நாங்களும் இணையாக உம்மோடு வாழ்கின்றோம்
சிரித்த உங்கள் முகம் பார்க்க ஆசையாக உள்ளதம்மா !
கனவினில் நீங்கள் வந்து கலகலவென்று சிரித்தாலும் நிஜமாக
நேர் வந்து முகம் காட்டி சிரிப்பாயோ !
உன் முகம் பார்க்க மாட்டோமா!!
என ஏங்கி தவிக்கின்றோம்.
என்றோ ஒரு நாள் கூற்றுவன் இங்கு வந்து எம்மை எல்லாம்
அழைத்து விடுவான் என்பதை நாம் அறிவோம்
அந்த நாள் வரும் வரை பொறுமையுடன் காத்திருக்கின்றோம்
எங்கள் நெஞ்சில் நீங்காமல் வாழும் இதய தீபமே!!!
உமது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும்
கணவன், பிள்ளைகள்.
வீட்டுமுகவரி:
88 Napier Rd,
London E6 2SF,
UK.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

